சிறையிலிருந்து வெளியே வந்தார் சவுக்கு…!!
- நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. அதன்பேரில் சவுக்கு சங்கர் கடந்த செப்.15 ஆம் தேதி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் கடலூர் சிறைக்கு மாற்றப்பட்டார். இதனிடையே உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் உத்தரவை எதிர்த்து சவுக்கு சங்கர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
- அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்டிருந்த சிறை தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. மேலும் விசாரணை முடியும் வரை உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கக்கூடாது என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் அவர் மீது இருக்கும் மேலும் 4 வழக்குகளில் சவுக்கு சங்கர் மீண்டும் கைது செய்யப்பட்டார். இதை அடுத்து இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் நீதிமன்ற விசாரணை முடிந்ததும் அவர் மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
- நவம்பர் 19 இன்று காலை சிறையிலிருந்து சவுக்கு சங்கர் பிணையில் விடுதலையாகி வெளியில் வந்தார். சிறையிலிருந்து வெளியே வந்த சவுக்கு சங்கரை வரவேற்க பத்திரிக்கையாளர் ஊடகத்துறை நண்பர்கள் பலர் வந்திருந்தனர். பொன்னாடை போர்த்தி வரவேற்றனர், சவுக்கு சங்கர் அந்த வரவேற்ப்பை பெருமகிழ்ச்சியோடு ஏற்றார்.
- சவுக்கு சங்கரை வெளியே வரும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி பகிரப்பட்டு வருகிறது.