உதயநிதிக்கு எதிராக சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடுவேன் சவுக்கு சங்கர் அதிரடி! அதிமுக,நாம்தமிழர்,பிஜேபி எனக்கு ஆதரவாக இருக்கும்!
Editor Zhagaram
உதயநிதிக்கு எதிராக சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடுவேன் சவுக்கு சங்கர் அதிரடி! அதிமுக,நாம்தமிழர்,பிஜேபி எனக்கு ஆதரவாக இருக்கும்!
தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த சவுக்கு சங்கரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு தேர்தல் அரசியலுக்கு வருவேன் என்று பதிலளித்துள்ளார்.
சவுக்கு சங்கரிடம் சினிமாவில் நடிக்கப் போகிறாரா?? அரசியலுக்கு வரப் போகிறாரா? என்று நெறியாளர் கேள்வி எழுப்பினார்.அதற்கு பதிலளித்த சவுக்கு சங்கர்!
“நாளைக்கு நானே சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதிக்கு எதிராகப் போட்டியிடுவேன். எனக்கு அதிமுக ஆதரவு அளிக்கும்.. நாம் தமிழர் கட்சியும், பிஜேபி கட்சியும் ஆதரவளிக்கும்.
அரசு ஊழியர் என்ற பணி இல்லாமல் போய்விட்டது. அடுத்து அரசியலில் ஈடுபடலாம். திருவாரூரில் உதயநிதி போட்டியிட்டாலும் திருவாரூரில் போட்டியிடுவேன். திருவள்ளூர் தொகுதியில் போட்டியிட்டால்! நானும் திருவள்ளூர் தொகுதியில் போட்டியிடுவேன்” என்று பதிலளித்துள்ளார்.
திமுகவுக்கு எதிராக, உதயநிதிக்கு எதிராக சவுக்கு சங்கர் தேர்தலில் போட்டியிடுவேன் என்று பேசியிருப்பது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.