செய்திகள்இந்தியா

சிவசேனாவை அழிக்க பாஜக முயலுகிறது; தேர்தல் ஆணையம் துணை போவதா? – சஞ்சய் ராவத் சாடல்

சிவசேனாவை அழிக்க மத்தியில் ஆளும் பாஜக அரசு முயலுகிறது, இதற்கு தேர்தல் ஆணையம் துணை போகிறது என சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் குற்றம்சாட்டியுள்ளார்.

மகாராஷ்டிராவில் நடைபெற்று வந்த சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்த மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி கடந்த மாதம் கவிழ்ந்தது. சிவசேனாவின் அதிருப்தி எம்எல்ஏக்கள் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் பிரிந்து பாஜகவுடன் இணைந்து ஆட்சியை அமைத்துள்ளனர்.

இந்நிலையில், 12 சிவசேனா எம்.பி.க்கள் சேர்ந்து, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் தனியாக மனு அளித்து, தங்களை தனியாகச் செயல்பட அங்கீகரிக்குமாறு கோரி உள்ளனர். இந்நிலையில், சிவசேனா கட்சிக்கு உரிமை கோரி தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு ஏக்நாத் ஷிண்டே தரப்பு கடிதம் எழுதியுள்ளது.

பதிலுக்கு தாங்கள்தான் உண்மையான சிவசேனா என்றும், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி குழுவை சிவசேனாவாக அங்கீகரிக்கக் கூடாது என்றும் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி தலைமை தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளது.

இந்தநிலையில் இருதரப்பினரும் ஆகஸ்ட் 8 ஆம் தேதிக்குள் தேவையான ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன் பிறகு இருதரப்பு ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் இதுபற்றி கூறியுள்ளதாவது:

உத்தவ் தாக்கரே தலைமையிலான குழு மற்றும் ஏக்நாத் ஷிண்டே அணியினர், கட்சியின் தேர்தல் சின்னம் குறித்த கோரிக்கைகளுக்கு ஆதரவாக ஆவணங்களைச் சமர்பிக்க, தேர்தல் ஆணையத்திடம் (இசி) சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் சனிக்கிழமை ஏமாற்றம் தெரிவித்தார். ஆகஸ்ட் 8 ஆம் தேதிக்குள் உரிமைகோரல்களை சமர்ப்பிக்க போட்டி முகாம்களுக்கு தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

56 ஆண்டுகளுக்கு முன்பு பாலாசாகேப் தாக்கரே நிறுவிய சிவசேனா குறித்து தேர்தல் ஆணையம் கேள்விகளை எழுப்புவது அதிர்ச்சியளிக்கிறது. பாஜகவின் இந்துத்துவாவையே சிவசேனாவும் பின்பற்றும் காரணத்திற்காக எங்கள் கட்சியை அழிக்க சதி நடக்கிறது. கட்சியின் ஒரே தலைவர் உத்தவ் தாக்கரே தான்.

தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை மகாராஷ்டிரா மக்களுக்கு அதிர்ச்சியளிக்கிறது. பாலாசாகேப் தாக்கரே 56 ஆண்டுகளுக்கு முன்பு கட்சியை உருவாக்கினார். டெல்லி எங்கள் கட்சியை அழிக்க நினைக்கிறது. சிவசேனாவின் ஒரே தலைவர் உத்தவ் தாக்கரே மட்டுமே.

முன்னதாக மகாராஷ்டிர முதல்வர் ஷிண்டே கூறுகையில் ‘‘தேர்தல் ஆணையம் எங்களுக்கு கடிதம் எழுதியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் முன் எங்கள் நிலைப்பாட்டை முன்வைப்போம். நாங்கள் தான் உண்மையான சிவசேனா. எங்களிடம் 50 எம்எல்ஏக்கள் உள்ளனர், மக்களவையில், மூன்றில் இரண்டு உறுப்பினர்கள் எங்களுடன் உள்ளனர்” என்று கூறினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button