செய்திகள்
பட்டியலின இளைஞரை தரக்குறைவாக பேசிய திமுக நிர்வாகி மாணிக்கம்! பொறுப்பில் இருந்து தற்காலிக இடைநீக்கம் செய்து திமுக நிர்வாகியை காப்பாற்ற முயற்சிக்கிறதா அரசு?
அநாகரிகமாகவும் முகம் சுளிக்கும் வகையில் பேசிய திமுக நிர்வாகியை பதவி நீக்கம் செய்யாமல் தாமதிப்பது ஏன்?
பட்டியலின இளைஞரை தரக்குறைவாக பேசிய திமுக நிர்வாகி மாணிக்கம்! பொறுப்பில் இருந்து தற்காலிக இடைநீக்கம் செய்து திமுக நிர்வாகியை காப்பாற்ற முயற்சிக்கிறதா அரசு?
- சேலம் மாவட்டம் சிவதாபுரம் அடுத்த திருமலைகிரி ஊராட்சி பகுதியில் உள்ளமாரியம்மன் கோவிலில் கடந்த வியாழக்கிழமை கோவில் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
- அப்பொழுது அதே கிராமத்தை சேர்ந்த பட்டியல் இனப் பிரிவை சேர்ந்த பிரவீன் என்றஇளைஞர் கோயிலுக்குள் சென்றதாக கூறப்படுகிறது.இதனை அறிந்த திருமலைகிரி ஊராட்சி மன்ற தலைவரும் திமுக ஒன்றிய செயலாளருமான மாணிக்கம், அடுத்த நாள் காலையில், பிரவீன் மற்றும் அவரது தாய் தந்தை அனைவரையும் ஊர் பொதுமக்கள் மத்தியில் நிற்க வைத்து அநாகரிகமாகவும் முகம் சுளிக்கும் வகையில் பேசியுள்ளார்.
- .இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வந்த நிலையில் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது . இதனை அடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் திருமலைகிரி ஊராட்சி பகுதிக்கு சென்று பட்டியலின மக்களிடம் நடந்தவற்றை விசாரித்தனர் .இந்த நிலையில் திமுக தலைமை கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இந்த அறிவிப்பில் சேலம் கிழக்கு மாவட்டம் சேலம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர்
- மாணிக்கம் அவர்கள் கழக கட்டுப்பாட்டை மீறியும் கழகத்திற்கு அவர் பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் அவரை அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட
- அனைத்து பொறுப்பில் இருந்து தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
- இதனையடுத்து, சேலம் இரும்பாலை காவல்துறையினர் திருமலைகிரி ஊராட்சி பகுதிக்கு சென்று ஊராட்சி மன்ற தலைவர் மாணிக்கத்தை கைது செய்தனர். இந்த தகவலை அறிந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் திமுகவினர் இரும்பாலை காவல் நிலையம் முன்பு திரண்டு காத்திருந்தனர். மாணிக்கத்தை காவல்துறையினர் அழைத்து செல்வதை அறிந்த ஊர் மக்கள் சாலையில் திடீரென அமர்ந்து காவல்துறை வாகனத்தை முற்றுகையிட்டனர்.
- இதனை அடுத்து அப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பெரும் போராட்டத்திற்கு பிறகு காவல்துறையினர் அவரை இரும்பாலை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
- இதனை அடுத்து மாணிக்கத்தின் ஆதரவாளர்களுக்கும் காவல்துறையினருக்கும் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது . இந்த தள்ளுமுள்ளுவில் ஒரு சில காவலர்களின் சட்டையும் கிழிந்தது . காவல் உதவி ஆணையாளர் ஆனந்தி தலைமையில் காவல்துறையினர் ஊராட்சி மன்ற தலைவர் மாணிக்கம் அவர்களிடம் விசாரணை நடைபெற்றது.
- இதனையடுத்து சேலம் மாநகர காவல்துறை இதுகுறித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
- ”சேலம் மாநகர D4 இரும்பாலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருமலைகிரி கிராம பஞ்சாயத்தில் உள்ள பெரியமாரியம்மன் கோவில் பண்டிகையின் போது அதே ஊரில் குடியிருக்கும் (இந்து ஆதிதிராவிடர்) வகுப்பைச் சேர்ந்த பிரவின்குமார் த.பெ.செந்தில் என்பவர் 26.01.2023ம் தேதி இரவு 08.30 மணியளவில் மேற்படி கோவிலுக்குள் சென்று வழிபட்டுவிட்டு வந்துள்ளார். அவரை 27.01.2023ம் தேதி அன்று காலை திருமலைகிரி கிராம பஞ்சாயத்து தலைவர் திரு.மாணிக்கம் (இந்து வன்னியர்) மேற்படி கோவிலுக்குள் நுழைந்த காரணத்தினால் பிரவின்குமாரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்க முற்ப்பட்டதாக பிரவின் குமார் கொடுத்த புகாரின் பேரில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு புலன்விசாரணை செய்து மாணிக்கம் என்பவரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
- இது போன்று தவறுகள் யார் செய்தாலும் காவல் துறை கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளும்” என சேலம் மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.