கடந்த ஆறு ஆண்டுகளாக தமிழ்நாட்டில் பத்திரப்பதிவு மோசடி நடப்பதாக அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது.மேலும் பத்திரப்பதிவு மோசடி மற்றும் ஊழல் குறித்து விசாரணை கோருகிறது அறப்போர் இயக்கம்.இன்று நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் அறப்போர் இயக்கத்தை சார்ந்த ஜெயராமன் அவர்கள் கூறும் போது,தமிழ்நாட்டில் ஆறு ஆண்டுகளாக தமிழ்நாட்டில் பத்திரப்பதிவு மோசடி நடப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும்,PACL என்ற நிறுவனம் மிக பெரிய அளவில் மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் குற்றம்சாட்டியுள்ளார்.இந்தியா முழுவதும் இந்நிறுவனம் சிட் பண்ட் மோசடியில் ஈடுபட்டது.பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தை நாடிய போது உச்சநீதிமன்றம் முன்னால் நீதிபதி லோதா தலைமையில் ஒரு குழு அமைத்தது.அந்த குழு இந்நிறுவனத்திடம் ம் வாங்கிய அத்தனை நிலங்களையும் விற்று உரியவர்களிடம் பணத்தை கொடுக்கும்படி உத்தரவிட்டது.மேலும் இந்நிறுவனம் வாங்கி அத்தனை நிலங்களையும் விற்பனைக்கு அல்ல என்று சீலிட்டு சம்மந்தப்பட்ட அத்தனை பத்திரப்பதிவு அலுவலகத்திற்கும் அனுப்பியது.மேலும் தமிழ்நாடு பத்திரப்பதிவு ஐஜிக்கு 30/8/2016 அன்று கடிதம் எழுதியுள்ளது.அக்கடிதத்தில் இந்நிலங்களை விற்க லோதா குழுவிற்கு மட்டுமே அதிகாரம் உண்டு என்று கூறியுள்ளனர்.
இதனை மீறி பத்திரப்பதிவு அதிகாரிகள் லோதா குழுவின் கடிதத்தை மீறி கடந்த ஆறு ஆண்டுகளில் மட்டும் 5300 ஏக்கர் நிலங்களை விற்றுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.இதற்கு PACL நிறுவனத்தை சார்ந்தவர்கள் உடந்தை என்றும் கூறியுள்ளார்.உதாரணமாக மதுரையில் சாமநத்தம் பகுதியில் உள்ள 38.26 ஏக்கர் நிலத்தை விற்பது குறித்து மதுரை தெற்கு இணை-1 சார்பதிவாளர் தலைமை அலுவலகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.இதற்கு கூடுதல் பதிவு துறை தலைவர் கே.வி.சீனிவாசன் நிலத்தை பதிவு செய்ய தடை இல்லை என்று கூறியுள்ளதாக அறப்போர் ஜெயராமன் கூறியுள்ளார் . மேலும் இதே போன்று பல உயர் அதிகாரிகளுக்கும் தொடர்பிருப்பதாக கூறியுள்ளார்.
முதல்லீட்டாளர்கள் கொடுத்த புகாரின் பேரில் இன்றுவரை ஒரு சில சார்பதிவாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். கே.வி.சீனிவாசன் போன்ற உயர் அதிகாரிகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.அவர்களை அத்துறை செயலாளர் ஜோதிநிர்மலாசாமி மற்றும் அத்துறை அமைச்சர் மூர்த்தி என்று குற்றம்சாட்டியுள்ளார்.சார்பதிவாளர்கள்,மாவட்ட தணிக்கை அதிகாரிகள்,மாவட்ட பதிவுத்துறை தலைவர் உள்ளிட்ட பலருக்கு தொடர்பிருப்பதாக கூறியுள்ளார். இந்த மோசடி விவகாரத்தில் அமைச்சர் உட்பட பலரும் விசாரணை செய்யப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். இதுதொடர்பாக சட்ட ரீதியான நடவடிக்கையில் அறப்போர் இயக்கம் ஈடுபடும் என்று கூறியுள்ளார்.