ஆயுதங்களுடன் சரணடைந்து மரியுபோலை ஒப்படைக்காவிட்டால் பேரழிவை சந்திக்க நேரிடும் என உக்ரைனுக்கு ரஷ்யா எச்சரித்துள்ளது.உக்ரைன் மீதான தாக்குதலை நாளுக்கு நாள் ரஷ்யா தீவிரப்படுத்தி வருகிறது. மரியுபோல் துறைமுக நகரை 4 லட்சம் மக்களுடன் சிறைப்பிடித்து வைத்துள்ள ரஷ்யா பொதுமக்களை குறிவைத்து தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. 400 பேர் தங்கியிருந்த பள்ளியின் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. ரஷ்ய தாக்குதலில் உக்ரைனின் பொதுமக்கள் உயிரிழப்பு 1000 ஐ கடந்துள்ளது.
கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி ரஷ்ய அதிபர் புதின் உக்ரைன் மீதான தாக்குதலை அறிவித்தார். அன்று தொடங்கி இன்று வரை ரஷ்ய தாக்குதல் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் உதவியால் உக்ரைனும் போரைத் தாக்குப்பிடித்து வருகிறது.
இந்நிலையில், மரியுபோல் நகரில் ஆயுதங்களை விடுத்து உக்ரைன் படைகள் சரணடையாவிட்டால் பேரழிவை சந்திக்க நேரிடும் என ரஷ்யா எச்சரித்துள்ளது.