Site icon ழகரம்

உக்ரைன் போரின் 21வது நாள்.. இழப்புகளால் தள்ளாடும் ரஷ்யப் படைகள்

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலைத் தொடங்கி இன்றுடன் (மார்ச் 16) 21 நாட்கள் ஆகின்றன. இந்நிலையில் போரில் அதிகளவில் வீரர்கள், தளவாடங்களை இழந்ததால் ரஷ்யப் படைகள் தள்ளாட்டம் கண்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம், உக்ரைன் தாக்குதலில் இழப்புகளை சந்தித்துள்ள ரஷ்யா தொடர்ந்து வெளிநாடுகளில் இருந்து படை வீரர்களைக் கொண்டுவந்து போரில் ஈடுபடுத்த முயன்று வருகிறது. எங்களுக்குக் கிடைத்துள்ள அண்மைத் தகவலின்படி ரஷ்யா எதிர்த்து சண்டையிட திணறி வருகிறது. உக்ரைன் நிலையான பதிலடியைக் கொடுத்துவரும் நிலையில் நாளுக்கு நாள் ரஷ்யாவுக்கு சவால் அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், ரஷ்யா தனக்கு உதவியாக சிரியாவிலிருந்து 40,000 வீரர்களை களமிறக்கி உக்ரைன் எல்லையில் தயார் நிலையில் வைத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையில், “ரஷ்யாவுடனான பேச்சுவார்த்தை தொடரும் ஆனால் ரஷ்யா சற்றே தனது கோரிக்கைகளை யதார்த்தமானதாக நடைமுறை சாத்தியமானதாக வடிவமைக்க வேண்டும். உக்ரைன் நலன் கருதி பேச்சுவார்த்தையில் நல்ல முடிவு எட்டப்பட இன்னும் சிறிது அவகாசம் வேண்டும் என்றார். மேலும், உக்ரைன் வான்பரப்பை நோ ஃப்ளை ஜோனாக அறிவிக்க வேண்டும் ரஷ்யாவை தண்டிக்க இன்னும் அதிகளவில் போர் தளவாடங்கள் வேண்டும்” என்று ஜெலன்ஸ்கி கோரிக்கை விடுத்தார்.

Exit mobile version