
பாஜக இளைஞர் அணி தலைவர் வினோஜ் பி.செல்வம் மீது சைபர் க்ரைம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த இளங்கோவன் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பாஜக இளைஞர் அணி தலைவர் வினோஜ் பி.செல்வம் மீது புகார் அளித்துள்ளார் .
“ வினோஜ் பி.செல்வம் தனது ட்விட்டர் ஹேண்டிலில், பொய்யான தகவலை, வதந்தியை மக்களிடையே பரப்பும் நோக்கில் பதிவிட்டதாகவும் அந்த பதிவானது மதத்தின் அடிப்படையில் மக்களிடையே வெறுப்பையும், பகைமையையும் உருவாக்கி பொது அமைதியை குலைக்கும் வகையிலும், உள்ளதால் அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்திருந்தார்.
இதனையடுத்து வினோஜ் பி.செல்வம் மீது கலகம் செய்ய தூண்டிவிடுதல், அரசுக்கு எதிராக அல்லது பொது அமைதிக்கு எதிராக எந்தவொரு நபரையும் குற்றம் செய்யத் தூண்டுதல். உட்பட 3 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றபிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.