
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள அவரது வாழ்க்கை சுயசரிதையான உங்களின் ஒருவன் (பாகம்-1) புத்தக வெளியிட்டு விழா சென்னையில் இன்று நடைபெறுகிறது. இதில், காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிடவுள்ளார்.
சென்னை – நந்தம்பாக்கத்தில் உள்ள ‘சென்னை வர்த்தக மைய கூட்டரங்கில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு உங்களில் ஒருவன் புத்தக வெளியிட்டு விழா நடைபெறுகிறது. திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் இந்த நிகழ்வுக்கு தலைமை தாங்குகிறார். திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி. முன்னிலை வகிக்கிறார். திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. வரவேற்று பேசுகிறார்.
முதலமைச்சர் பினராயி விஜயன், ஜம்மு – காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா, பீகார் மாநில எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், கவிஞர் வைரமுத்து, நடிகர் சத்யராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்க உள்ளனர்.