செய்திகள்உலகம்

ரஷ்ய போருக்கு எதிர்ப்பு: புதினின் ஆலோசகர் பதவி விலகியதோடு நாட்டைவிட்டும் வெளியேறினார்

உக்ரைனுக்கு எதிரான ரஷயப் போர் முடிவில்லாமல் ஒரு மாத காலமாக நீண்டு கொண்டிருக்க, ரஷ்ய அதிபர் புதினின் ஆலோசகரான அன்டோலி சுபைஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும், அவர் ரஷ்யாவிலிருந்தும் வெளியேறியுள்ளார்.

ரஷ்ய போர் தொடங்கியதிலிருந்து ரஷ்யாவிலிருந்து வெளியேறிய மிக உயர்ந்த பதவியை அலங்கரித்தவர் ரஷ்ய அதிகாரி இவர்தான்.
அன்டோலி சுபைஸ், 1990களில் ரஷ்யாவின் பொருளாதார சீர்திருத்தங்களை கட்டமைத்தவர்களில் முக்கியமானவராகக் கருதப்படுபவர். 1990களில் ரஷ்யா தனியார்மயமாக்குதலை ஊக்குவித்த போது சுபைஸ் அதை பார்த்து செதுக்கி கட்டமைத்தார். புதினின் வளர்ச்சியை ஒவ்வொரு படிநிலையை ஆதரித்தவர் சுபைஸ்.

கடந்த வாரம் தனது சகாவும் பொருளாதார நிபுணருமான யெகோர் கைடார் மறைவை ஒட்டி தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவிட்ட சுபைஸ், என்னைவிட ரஷ்யா எதிர்கொண்டுள்ள ஆபத்துக்களை சரியாக கணித்தவர் என்று பதிவிட்டிருந்தார்.

ரஷ்ய தாக்குதல் தொடங்கியதிலிருந்தே தனது நடவடிக்கை மீதான உள்நாட்டு விமர்சனங்களை ரஷ்ய அரசு கடுமையாக எதிர்த்து வருகிறது. அண்மையில் மக்கள் முன்னிலையில் பேசிய ரஷ்ய அதிபர் புதின், ராணுவ நடவடிக்கையை விமர்சிப்பவர்கள் அனைவரும் தேசத்துரோகிகள் என்றார்.

இந்நிலையில் தான் ரஷ்ய அதிபர் புதினின் ஆலோசகரான அன்டோலி சுபைஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். முன்னதாக கடந்த வாரம் அர்காடி ட்வோர்கோவிச் என்ற பொருளாதார மேதையும் ரஷ்யாவுக்கான ஆலோசனக் குழுவில் இருந்து விலகினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button