இலங்கை அதிபர் கோத்தபயா ராஜபக்சவை நாடு கடத்தக்கோரி மாலத்தீவிலும் போராட்டம் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை நாட்டை விட்டு வெளியேறிச் சென்று மாலத்தீவில் தஞ்சமடைந்துள்ளார். இந்நிலையில், மாலத்தீவில் இருந்து அவரை வெளியேற்றுமாறு கோரி அந்நாட்டு மக்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.இந்நிலையில் கோத்தபயா மாலத்தீவிலிருந்து சிங்கபூர் செல்லவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கோத்தபயா ராஜபக்ச மாலத்தீவு தப்பிச் செல்ல இந்தியா உதவி செய்ததாக இலங்கையைச் சேர்ந்த சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கு இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.அதே நேரம் மாலத்தீவு அரசும் கோத்தபயா குறித்த தகவல்களை வெளியிட மறுத்துவிட்டது