Site icon ழகரம்

‘பொன்னியின் செல்வன்’ கேரக்டர் போஸ்டர்களுடன் வெளியீட்டு தேதி அறிவிப்பு….!

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘பொன்னியின் செல்வன்’. ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், பிரகாஷ்ராஜ், பிரபு, ரகுமான், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடா, இந்தி என ஐந்து மொழிகளில் படம் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இந்தப் படத்தினை லைகா நிறுவனம் வழங்க, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

லைகா நிறுவனர் சுபாஸ்கரன் பிறந்தநாளை முன்னிட்டு, வெளியீட்டு தேதியுடன் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் ஆகியோர் கேரக்டர்களின் புகைப்படங்களையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

Exit mobile version