Site icon ழகரம்

பெண்ணை கேவலமாக விமர்சித்த உதயநிதி வருத்தம் தெரிவிக்க வேண்டும் – பொன் ராதாகிருஷ்ணன்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், உதயநிதி ஸ்டாலின் தான் ஒரு சட்டப்பேரவை உறுப்பினர் என்பதை உணர வேண்டும்.

தஞ்சாவூரில் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது நகை கடனை தள்ளுபடி செய்யுமாறு கோரிய பெண்ணை மிக மோசமாக கேவலமாக விமர்சனம் செய்துள்ளார். இதற்காக உதயநிதி ஸ்டாலின் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று கூறினார்.

 

Exit mobile version