பாகிஸ்தானின் பெஷாவர் பகுதியில் உள்ள மசூதி ஒன்றில் குண்டு வெடித்ததில் 30 பேர் பலியாகியுள்ளதாகவும் 50 பேர் காயமடைந்துள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானின் பெஷாவர் பகுதியில் கிஸ்ஸா குவானி பஜாரில் உள்ள மசூதி ஒன்றில் 2 நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்த நிகழ்வை தொடர்ந்து மசூதியின் உள்ளே குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.
இதுவரை 30 உடல்கள் மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டதாக அங்கிருந்தவர்கள் கூறுகின்றனர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்திருக்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை.