Site icon ழகரம்

‘‘மாநிலங்கள் ஒன்று சேர்ந்தது தான் இந்தியா’’- ராகுல் காந்தி திட்டவட்டம்

நமது அரசியல் அமைப்பு சட்டத்தின்படி மாநிலங்கள் ஒன்று சேர்ந்தது தான் இந்தியா என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.

பல்வேறு மாநிலங்களில் நடந்த தேர்தல்களில் தொடர் தோல்விகளால் துவண்டுபோய் விட்ட காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிரூட்டும் வகையில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் அந்த கட்சி ‘நவ் சங்கல்ப் சிந்தன் ஷிபிர்’ என்ற பெயரில் 3 நாள் சிந்தனை அமர்வு நடந்து வருகிறது. 2024-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இதில் பங்றே்றுள்ளனர். இதில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசியதாவது:
தற்பாது இரண்டு வகையான இந்தியா உள்ளது. ஒன்று கருத்துகளை கூறும் இந்தியா, மற்றொன்று அதனை எதிர்க்கும் இந்தியா. மக்கள் பிரிக்கப்படுகிறார்கள் என்பதை அவர்களுக்கு உணரவைக்க வேண்டியது நமது பொறுப்பு. காங்கிரஸ் கட்சியால் மட்டுமே இதை செய்ய முடியும்.

நமது நாடு எந்த ஒரு தனி நபருக்கும், எந்த ஒரு கட்சிக்கும் சொந்தமானது அல்ல. இங்கு பகிரும் இந்தியா, மற்றொன்று .வன்முறையில் ஈடுபட தயாராகும் இந்தியா. காங்கிரஸால்தான் நாட்டை முன்னெடுத்துச் செல்ல முடியும் என்பது மக்களுக்குத் தெரியும். வெகுஜன மக்களுடனான நமது தொடர்பு அறுந்து விட்டது என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

நமது அரசியல் அமைப்பு சட்டத்தின்படி மாநிலங்கள் ஒன்று சேர்ந்தது தான் இந்தியா. அனைத்து தரப்பினா் கருத்துகளையும் கேட்கும் கட்சி காங்கிரஸ். அதுதான் நமது கட்சியின் டி.என்.ஏ. ஆனால் மற்ற கட்சிகளை பற்றி நான் சொல்ல வேண்டியதில்லை. காங்கிரஸை வழிநடத்த இளைஞர்கள் முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Exit mobile version