Site icon ழகரம்

எடப்பாடி பழனிசாமியை கண்டித்து கொளத்தூரில் ஓபிஎஸ் அணி ஆர்ப்பாட்டம்

முன்னாள் முதல்வர் பழனிசாமியை கண்டித்து, கொளத்தூரில் ஓபிஎஸ் அணியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை கொளத்தூர் அகரம் சந்திப்புப் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, அதிமுக இளைஞரணி வடசென்னை மாவட்டச் செயலாளர் கொளத்தூர்கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். இதில், பெண்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் பழனிசாமியைக் கண்டித்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர், பழனிசாமிக்கு எதிராக பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

பின்னர், கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை என்று இருந்தால், அதுஓ.பன்னீர்செல்வம் மட்டும் தான்.பழனிசாமி துரோகத்தின் அடையாளமாக செயல்படுகிறார்.

அவரால் ஆதாயம் அடைந்தவர்கள் மட்டுமே, தற்போது அவரைச் சுற்றிஉள்ளனர். அவர்களை வைத்துக்கொண்டு, அவர்கள்தான் கட்சி என்று தீர்மானித்துவிட முடியாது.

கொளத்தூரில் தொடங்கிய இந்த கண்டன ஆர்ப்பாட்டம், கன்னியாகுமரி வரை தொடர்ந்து நடைபெறும்’’ என்றார்.

Exit mobile version