Site icon ழகரம்

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மீண்டும் செயல்படலாம்: ஓபிஎஸ்

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மீண்டும் அவர்களின் பதவிகளில் செயல்படலாம் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் ஓ.பன்னீர் செல்வம், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தொடர்ந்து நிர்வாகிகளை நீக்கி வருகிறன்றனர். இந்நிலையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மீண்டும் அவர்களின் பதவிகளில் செயல்படலாம் என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுகவிலிருந்து பல்வேறு காரணங்களுக்காக நீக்கப்பட்ட அனைத்து நிர்வாகிகளும் அவர்களது வேண்டுகோளுக்கிணங்க மீண்டும் அவரவர் பொறுப்புகளில் செயல்பட அனுமதிக்கப்படுகிறார்கள்.

ரத்து செய்யப்பட்ட ஊராட்சி செயலாளர், தொகுதி செயலாளர், தொகுதி கழக இணைச் செயலாளர்கள் உள்ளிட்ட பதவிகள் மீண்டும் தோற்றுவிக்கப்பட்டு, ஏற்கெனவே பணிபுரிந்தவர்கள் அந்தந்த பொறுப்புகளில் பணியாற்ற அனுமதிக்கப்படுவார்கள் என்பதையும் காலியாக உள்ள பதவிகள் விரைவில் நிரப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Exit mobile version