தென் மாவட்டங்களுக்கு இரண்டு நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வி.கே.சசிகலாவை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ராஜா திருச்செந்தூரில் சந்தித்துப் பேசியுள்ளார்.
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு வி.கே.சசிகலா இரண்டு நாள் சுற்றுப்பயணம் சென்றுள்ளார்.
இன்று காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி சென்ற அவர், பின்னர் அங்கிருந்து நெல்லை மாவட்டம் விஜயாபதி விசுவாமித்திரர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
நாளை தென்காசி செல்லும் சசிகலா, அங்கிருந்து கார் மூலம் மதுரை வந்து, அங்கிருந்து விமான மூலம் சென்னை திரும்புகிறார்.
இந்நிலையில், இன்று திருச்செந்தூர் கோயிலில் சசிகலா சாமி தரிசனம் செய்தார். பின்னர், திருச்செந்தூரில் தங்கியிருந்த சசிகலாவை, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ராஜா சந்தித்துப் பேசினார்.