விவசாயிகள் ஏழை எளிய மக்களின் முன்னேறத்திற்காக சிந்தித்து முனைப்புடன் பல திட்டங்களை கொண்டு வந்த மாமனிதர் !
- ஓமண்டூர் ராமசாமி 1895 ஆம் ஆண்டு பிப்ரவரி 1 ஆம் தேதி தென் ஆற்காடு மாவட்டத்தில் திண்டிவனம் அருகே உள்ள ஓமந்தூர் கிராமத்தில் பிறந்தார். அவர் இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும் இந்திய தேசிய காங்கிரசின் அரசியல்வாதியும் ஆவார். அவர் 23 மார்ச் 1947 முதல் 6 ஏப்ரல் 1949 வரை மெட்ராஸ் பிரசிடென்சியின் பிரதமராகப் பணியாற்றினார். ஓமந்துர் ராமசுவாமி 23 மார்ச் 1947 அன்று சென்னையின் முதல்வர் அல்லது பிரதமரானார் மற்றும் 6 ஏப்ரல் 1949 வரை ஆட்சியில் இருந்தார்.
சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்ற எண்ணம் கொண்டவர். விவசாயிகள் ஏழை எளிய மக்களின் முன்னேறத்திற்காக சிந்தித்து முனைப்புடன் பல திட்டங்களை கொண்டு வந்தவர். - ஆட்சியில் ஏற்படுத்திய மாற்றங்கள்:
இவர் ஆட்சியில் வந்ததும் அனைவரையும் சமமாக இருக்க பல முயற்சிகள் செய்தார். அவை யாவையும் சொல் வழி மட்டும் இல்லாது செயல் வழியும் சட்டங்கள் அமைத்து நடைமுறையில் கொண்டு வந்தவர். அவ்வாறாக இவர் கொண்டு வந்த சட்டங்கள் பின்வருமாறு:
ஆலய பிரவேச சட்டம், ஜமின் தாரி ஒழிப்பு முறை சட்டம், இருந்து சமய அறநிலைய சட்டம், தேவதாசி முறை ஒழிப்பு சட்டம். ஆதிதிராவிடர்கள் ஆலயத்தில் நுழைவதற்கான தடையை முழுவதுமாக நீக்கி,தமிழ்நாட்டின் பல முக்கிய கோவில்களில் ஆதிதிராவிடர்களை பிரவேசிக்க வைத்த பெருமைக்கு உரியவர் இவரே.
- நேர்மையான அரசியல்வாதி:
பதவி ஏற்றதும் செய்த முதல் வேலை பாராட்டுக் கூட்டங்கள், வெற்றி விழாக்கள் ஆகிய அரசியல் ஆரவாரங்களுக்கு தடை விதித்தார். அதுவரை இந்திய மாகாணத்தில் எந்த முதவல்வரும் செய்யாத நடவடிக்கையாக அது இருந்தது. மிக மிக அவசியமான தருணங்களில் மட்டுமே பத்திரிக்கையாளர்களை நேரில் சந்தித்தார்.தனிப்பட்ட பேட்டி,புகைப்படம் எடுப்பது போன்ற எதற்கும் அவரிடம் எளிதில் அனுமதி வாங்க முடியாது.மேலும் தனிப்பட்ட பரிந்துரைகளுக்கு வருவோரை அனுமதிக்கவே மாட்டார்.
- மது விலக்கு: முந்தைய ஆட்சியில் 8 மாவட்டங்களில் மட்டுமே மதுவிலக்கு அமலில்
இருந்தது.இவருடைய முயற்சியில் எஞ்சிய 17 மாவட்டங்களிலும் மதுவிலக்கு சட்டத்தை அமல்படுத்தினார்.
- எளிமையான மனிதர்: இவர் ஒருமுறை உடல்நிலை சரியில்லாமல் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அப்போது இவர் மருத்துவர்களிடம் கூறியதாவது, “மற்றவர்களுக்கு எப்படிப்பட்ட சிகிச்சை அளிக்கப் படுகிறதோ அதே சிகிச்சையை தான் எனக்கும் அளிக்க வேண்டும். தனிப்பட்ட சலுகைகளோ கவனிப்போ தரக் கூடாது என்றும் நிபந்தனைகளை விதித்த எளிய அரசியல்வாதி ஆவார்.இவர் நேர்மையாக செயல்பட்ட அரசியல்வாதி என்பதால் இவருடைய புகைப்படங்கள் பெரிதாக இல்லை .