செய்திகள்அரசியல்

செந்தமிழன் சீமான் தமிழகத்தின் “நம்பிக்கை நட்சத்திரம்” முனைவர் பர்வீன் சுல்தானா!

‘தமிழ்க்கடல்’ நெல்லை கண்ணன் புகழ்வணக்க நினைவேந்தல்...

செந்தமிழன் சீமான் தமிழகத்தின் “நம்பிக்கை நட்சத்திரம்” முனைவர் பர்வீன் சுல்தானா  பேச்சு!

நெல்லை கண்ணன்

  • பெருந்தமிழர் ‘தமிழ்க்கடல்’ நெல்லை கண்ணன் அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தும் நினைவேந்தல் நிகழ்வு, கலை இலக்கியப் பண்பாட்டுப் பாசறை சார்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

நெல்லை கண்ணன்

  • பண்டைத்தமிழ் இலக்கியங்களைப் பழுதறக் கற்றறிந்து, அவற்றை எளிய நடையில், மக்கள் மொழியில் எடுத்தியம்பும் பேராற்றல் கொண்ட தமிழ்ப்பேரறிஞர், இலக்கிய உலகையும், அரசியல் மேடைகளையும் ஒருசேர கட்டியாண்ட பேராசான், தனக்கிருந்த அளப்பெரும் அறிவாற்றலினாலும், பெரும்புலமையினாலும், ‘தமிழ்க்கடல்’ என எல்லோராலும் போற்றிக் கொண்டாடப்பட்ட பெருந்தமிழர் அப்பா நெல்லை கண்ணன் அவர்களது நினைவைப் போற்றுகிற புகழ்வணக்கக்கூட்டம் 05-11-2022 சனிக்கிழமையன்று சென்னை, தி.நகரிலுள்ள சர். பிட்டி. தியாகராயர் அரங்கில் கலை இலக்கியப் பண்பாட்டுப் பாசறை சார்பாக நடைபெற்றது.

நெல்லை கண்ணன்

  • ‘தோன்றின் புகழொடு தோன்றுக’ எனும் தமிழ் மறையோன் வள்ளுவப் பெருந்தகையின் கூற்றுக்கிணங்க, தமிழுக்குத் தொண்டு செய்வதே தனது அருந்தவப் பயனெனக் கருதி வாழ்ந்து, தமிழ் தந்த புகழோடு மறைந்த அப்பா நெல்லை கண்ணன் அவர்களது தமிழ்ப்பணிகளை நன்றிப்பெருக்கோடு நினைவுகூர வேண்டியது ஒவ்வொரு தமிழரின் தார்மீகக் கடமை என அழைத்து, தமிழ்ப்பெரியோரைப் போற்றும் இந்நிகழ்வில் பெருந்திரளாகப் பங்கேற்றனர்.

நெல்லை கண்ணன்

  • மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர் த ஸ்டாலின் குணசேகரன், முனைவர் பர்வீன் சுல்தானா, நடிகர் இளவரசு, இயக்குனர் சுகா ஆகியோர் புகழ் வணக்க நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்று தமிழ் கடல் இலக்கிய பேராற்றல் ஐயா நெல்லை கண்ணன் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தி உரையாற்றினர், நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் நிறைவாக புகழ் வணக்க உரையாற்றினார். 

நெல்லை கண்ணன்

நெல்லை கண்ணன்

  • முன்னதாக பேசிய முனைவர் பர்வீன் சுல்தானா ‘’எதிர்கால தமிழகத்தின் நம்பிக்கை நட்சத்திரம் அண்ணன் செந்தமிழன் சீமான்’’ என்றார். இது நாம் தமிழர் கட்சியின் இளைஞர்கள் பலரால் வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

User Rating: 4.25 ( 1 votes)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button