இளையராஜாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்குகிறார் பிரதமர் மோடி!
Editor Zhagaram
2018, 19 ஆண்டுகள் மற்றும் 2019 -20ம் கல்வி ஆண்டில் பயின்ற மாணவர்களுக்கு பட்டம் வழங்க இந்திய பிரதமர் நரேந்திர மோடி வருகை தர உள்ளார்.
இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு நாளை கவுரவ டாக்டர் பட்டம் வழங்குகிறார் பிரதமர் மோடி. திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராமத்தில் உள்ள காந்தி கிராமிய நிகர் நிலை பல்கலைக்கழகத்தின் 36 ஆவது பட்டமளிப்பு விழா நாளை வெள்ளிக்கிழமை பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறுகிறது. பல்கலைக்கழகத்தில் 2018, 19 ஆண்டுகள் மற்றும் 2019 -20ம் கல்வி ஆண்டில் பயின்ற மாணவர்களுக்கு பட்டம் வழங்க இந்திய பிரதமர் நரேந்திர மோடி வருகை தர உள்ளார்.
இதனால் பல்கலைக்கழக வளாகத்தில் 300 நபர்கள் அமர கூடிய தீவிர ஏற்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு நாளை கவுரவ டாக்டர் பட்டம் வழங்குகிறார் பிரதமர் மோடி.