செய்திகள்அரசியல்கட்டுரைகள்

குற்றப்பரம்பரைச்‌ சட்டத்தை நீக்குவதில்‌ தேவரின்‌ பங்கு…!!

இது ஒரு ஜாதிக்கான போராடிய போராட்டமல்ல...

குற்றப்பரம்பரைச்‌ சட்டத்தை நீக்குவதில்‌

முத்துராமலிங்க தேவரின்‌ பங்கு…!!

குற்றப்பரம்பரைச்‌ சட்டத்தை நீக்குவதில்‌ தேவரின்‌ பங்கு

  • இந்தியாவில்‌ ஆங்கிலேயர்‌ தங்கள்‌ ஆட்சியை நிலை நிறுத்தியபின்‌, இவர்களுடைய ஆட்சிக்கு எதிராக இந்தியாவில்‌ பல பகுதிகளில்‌ புரட்சி வெடித்தது. விடுதலை இயக்கங்கள்‌ தோன்றின. இத்தகைய எதிர்ப்பு இயக்கங்களை ஒடுக்குவதில்‌, ஆங்கில அரசு தீவிரம்‌ காட்டியது. 1871ஆம்‌ ஆண்டு பஞ்சாப்‌, மத்திய இந்தியா, உத்திரப்‌ பிரதேசம்‌, மேற்கு வங்காளம்‌ போன்ற பகுதிகளில்‌ வாழ்ந்த நிரந்தர குடிபற்ற மக்களை அடக்கும்‌ பொருட்டு 1871ம்‌ ஆண்டு குற்றம்பரம்பரைச்‌ சட்டம்‌ என்ற ஒரு சட்டத்தை ஆங்கில அரசு பிரகடனம்‌ செய்தது. ஆனால்‌, அச்சட்டத்தின்‌ விதிமுறைகள்‌ சென்னை மாகாணத்தில்‌ அப்பொழுது அமுல்படுத்தபடவில்லை. 
  • குற்றப்பரம்பரைச்‌ சட்டம்‌ Act Ill of 1911 என்று அழைக்கப்படும்‌, இச்சட்டத்தின்படி அரசாங்கம்‌ எந்த ஒரு ஜாதியையும்‌, எந்த ஒரு கூட்டத்தையும்‌, ஜாமீனில்‌ வர முடியாத பல குற்றங்களை தொடர்ந்து செய்து வருகிறார்கள்‌ என்று கருதினால்‌, அவர்கள்‌ மீது இச்சட்டத்தைப்‌ புகுத்தலாம்‌. அப்படி எந்த ஒரு ஜாதியினர்‌ மீதும்‌ இச்சட்டம்‌ பயன்படுத்தப்படும்போது, அந்த ஜாதியிலுள்ள உறுப்பினர்கள்‌ தங்கள்‌ உரிமையை நிலைநாட்ட நீதிமன்றத்திற்கு செல்ல முடியாது. 
  • 1911- ஆம்‌ ஆண்டு, பிரிவு 11 மற்றும்‌12ன்படி, எந்த ஒரு உறுப்பினரும்‌ சுதந்திரமாக ஒரு இடத்திலிருந்து மற்ற இடத்திற்கு செல்ல முடியாது. அன்றாடம்‌ இரவு நேரங்களில்‌ இச்சட்டத்தின்‌ கீழ்‌ கொண்டு வரப்பட்டவர்கள்‌ அருகில்‌ காவல்‌ நிலையத்திற்குச்‌ சென்று தினமும்‌ இருமுறை தங்கள்‌ வருகையை பதிவு செய்ய வேண்டும்‌. அவ்வாறு பதிவு செய்கிற போது கல்வியறிவு இல்லாத காரணத்தால் கைரேகை வைப்பது வழக்கம்‌. எனவே, இச்சட்டம்‌ “ரேகைச்‌ சட்டம்‌’” என்று அழைக்கப்பட்டது. குற்றப்பரம்பரைச்‌ சட்டத்தை நீக்குவதில்‌ தேவரின்‌ பங்கு
  • இச்சட்டத்தின்‌ கீழ்‌ பிரமலைகள்ளர்கள்‌ கொண்டு வரப்பட்டனர்‌. இவ்வாறாக இக்குற்றப்பரம்பரைச்‌ சட்டத்தால்‌ பிரமலைக்கள்ளர்களின்‌ தனிமனித உரிமை முழுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. W.J. Hatch என்பவர்‌, இச்சட்டத்தைப்‌ பற்றி விமர்சிக்கும்‌ போது, “ was doubtful whether any other Act on the Statute book goes so far in giving the police powers to take away a man’s freedom” steirm &_micsloni. 
  • இத்தகைய கொடுமையான சட்டம்‌ நடைமுறையில்‌ இருந்த போது, அதைக்‌ கண்டிக்க வேண்டுமென்று ஆரம்ப காலத்தில்‌, காங்கிரஸ்‌ கட்சி முயற்சி மேற்கொள்ளவில்லை. காங்கிரஸ்‌ இயக்கத்தில்‌ தீவிர ஈடுபாடு கொண்டகேரளாவைச்‌ சேர்ந்த வழக்குரைஞர்‌ ஜார்ஜ்‌ ஜோசப்‌ என்பவர்‌ இச்சட்டத்தின்‌ கொடுமைகளைப்‌ பற்றியும்‌, இச்சட்டத்தால்‌ பாதிக்கப்பட்ட பிரமலைக்கள்ளர்‌ பகுதிகளில்‌ 1915ஆம்‌ ஆண்டிலிருந்து பிரச்சாரம்‌ மேற்கொண்டார்‌. இச்சட்டத்தை எதிர்த்து 1920ல்‌ புரட்சி செய்த பெருங்காமநல்லூர்‌ மக்கள்‌ சார்பாகவும்‌, தன்‌ வாதங்களை அவர்‌ முன்‌ வைத்தார்‌.

குற்றப்பரம்பரைச்‌ சட்டத்தை நீக்குவதில்‌ தேவரின்‌ பங்கு 

  • 1933ம்‌ ஆண்டு இராமநாதபுரம்‌ மாவட்டத்தைச்‌ சார்ந்த *ஆப்ப நாட்டு மறவர்கள்‌”? மீது இக்குற்றப்பரம்பரைச்‌ சட்டம்‌ பாய்ந்த போது, இச்சட்டத்தின்‌ கொடுமைகளை தேவர்‌ உணர்ந்தார்‌. அது முதற்கொண்டு, இச்சட்டத்தை நீக்க முழு மூச்சாக செயல்பட்டார்‌. 1934 ஆம்‌ ஆண்டு அபிராமம்‌ என்ற ஊரில்‌ காங்கிரஸ்‌ தலைவர்‌ வரதராஜுலு நாயுடுஎன்பவர்‌ தலைமையில்‌ குற்றப்பரம்பரைச்‌ சட்ட எதிர்ப்பு மாநாடு கூட்டப்பட்டது. அக்கூட்டத்தில்‌ வரதராஜுலு நாயுடு தலைமையில்‌, ஒரு குழு அப்போதைய சென்னை மாகாண ஆளூநர்‌ முகம்மது உஸ்மான்‌ அவர்களைச்‌ சந்தித்து ஆப்பநாட்டு மறவர்கள்‌ மீது போடப்பட்ட குற்றப்பரம்பரைச்‌ சட்டத்தை நீக்க வேண்டுமென்று வேண்டிக்‌ கொண்டது. 
  • ஆனால்‌ சென்னை மாகாண ஆளுநர்‌ முகமது உஸ்மான்‌ இச்சட்டத்தை நீக்குகின்ற அதிகாரம்‌ தனக்கு இல்லையென்றும்‌, இது குறித்து தலைமை ஆளுநருக்கு தான்‌ சிபாரிசு செய்வதாகவும்‌ கூறினார்‌. அதன்‌ விளைவாக, 2000 பேர்‌ மீது விதிக்கப்பட்டிருந்த குற்றப்பரம்பரைச்‌ சட்டம்‌ 400 பேராக குறைக்கப்பட்டது. இதே போன்று பசும்பொன்‌ முத்துராமலிங்கத்‌ தேவர்‌, நீதிக்கட்சி ஆட்சியிலிருந்த போதும்‌, காங்கிரஸ்‌ கட்சி ஆட்சிக்கு வந்த போதும்‌, 1911 ஆம்‌ ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத்தை நீக்க வேண்டுமென்று குரல்‌ கொடுத்தார்‌. குற்றப்பரம்பரைச்‌ சட்டத்தை நீக்குவதில்‌ தேவரின்‌ பங்கு
  • 1936ஆம்‌ ஆண்டு நடைபெற்ற பேரையூர்‌ மாநாட்டில்‌ குற்றப்பரம்பரைச்‌ சட்டத்தை நீக்க வேண்டுமென்று தேவர்‌ மிகக்‌ கடுமையாகப்‌ பேசினார்‌. இக்கூட்டத்தில்‌ இந்தியாவிலுள்ள வீரம்‌ மிக்க சாதியினரான சீக்கியர்கள்‌, மராத்தியர்கள்‌ மீது இச்சட்டம்‌ பாய்ந்துள்ளது. அது போன்று தமிழ்நாட்டிலுள்ள கள்ளர்கள்‌ மற்றும்‌ மறவர்கள்‌ மீதும்‌ பாய்ந்துள்ளது. அவ்வேளையில்‌, கைரேகை வைப்பதற்கு பதிலாக, கட்டை விரலை வெட்டிக்‌ கொள்ளுங்கள்‌ என்று தேவர்‌ முழங்கினார்‌. 
  • தேவரின்‌ பேச்சு வேகத்தை கண்ணுற்ற காவல்‌ துறையினர்‌ இவரைப்‌ பேச அனுமதிக்கக்‌ கூடாதென்று நீதிமன்றத்தில்‌ முறையீடு செய்து 144 தடை உத்தரவு பெற்றனர்‌. இது சம்மந்தப்பட்ட வழக்கில்‌ கூறப்பட்ட தீர்ப்பின்‌ அடிப்படையில்‌ தான்‌ தேவர்‌ மேடைகளில்‌ பேசுவது தடை செய்யப்பட்டது. இது தான்‌ “வாய்ப்பூட்டுச்‌ சட்டம்‌”? என்று அழைக்கப்பட்டது. இந்த வாய்ப்பூட்டுச்‌ சட்டம்‌, தென்னிந்தியாவில்‌ தேவர்மற்றும்‌ வட இந்தியாவில்‌பாலகங்காதிர திலகருக்கு போடப்பட்டது. குற்றப்பரம்பரைச்‌ சட்டத்தை நீக்குவதில்‌ தேவரின்‌ பங்கு
  • தேவர்‌ பல ஊர்களில்‌ பேசிய பேச்சின்‌ காரணமாகவும்‌, இச்சட்டத்தை நீக்க அவர்‌ கொடுத்த கடுமையான எதிர்ப்பின்‌ காரணமாகவும்‌, இராஜாஜி தலைமையிலான அரசு 1938 ஆம்‌ ஆண்டு சென்னை மாகாணத்திலுள்ள அனைத்து மாவட்ட ஆட்சித்‌ தலைவர்களிடமிருந்தும்‌ குற்றப்‌ பரம்பரைச்‌ சட்டத்தின்‌ செயல்பாடு குறித்து அறிக்கையை அளிக்குமாறு கேட்டுக்‌ சொண்டது. அனைத்து மாவட்டங்களிலிருந்தும்‌, மாவட்ட ஆட்சித்‌ தலைவர்கள்‌ அறிக்கை சமர்ப்பித்தனர்‌. அதன்‌ மேல்‌ நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாக இரண்டாம்‌ உலகப்போர்‌ ஏற்பட்ட காரணத்தால்‌, காங்கிரஸ்‌ அமைச்சரவை ராஜினாமா செய்தது. அதன்‌ பின்னரும்‌, தேவர்‌, இந்த குற்றம்பரம்பரைச்‌ சட்ட எதிர்ப்பு இயக்கத்தை தீவிரப்படுத்தினார்‌. பல கிராமங்களுக்குச்‌ சென்று குற்றப்பரம்பரைச்‌ சட்டத்தை நீக்க போராட வேண்டுமென்று கோரிக்கை வைத்தார்‌. 1939 ஆம்‌ ஆண்டு, ஜுன்‌ மாதம்‌ உசிலம்பட்டியில்‌ நடைபெற்ற “கள்ளர்‌ இளைஞர்‌ மாநாட்டில்‌” இக்குற்றப்‌ பரம்பரைச்சட்டத்தை எதிர்த்துத்‌ தீவிரமாகப்‌ பேசினார்‌. அப்போது அச்சட்டத்தை நீக்கத்‌ தவறிய காங்கிரஸ்‌ அரசைக்‌ கண்டித்தார்‌. குற்றப்பரம்பரைச்‌ சட்டத்தை நீக்குவதில்‌ தேவரின்‌ பங்கு
  • பிரிட்டிஷ்‌ ஏகாதிபத்தியம்‌ ஒழிக்கப்பட வேண்டுமானால்‌, குற்றப்பரம்பரைச்‌ சட்டம்‌ நீக்கப்பட வேண்டும்‌ என்று கூறினார்‌. இந்த, குற்றப்பரம்பரைச்‌ சட்டத்தை வைத்து தேசீய வாதிகளை பிரிட்டிஷ்‌ ஏகாதிபத்தியம்‌ ஒடுக்குகின்றது என்று கூறினார்‌. சுத்தமான ரத்தம்‌. மறவர்களின்‌ நரம்புகளில்‌ ஒடுவது உண்மையானால்‌, “நீ கை ரேகை வைப்பதற்கு பதிலாக, கை விலங்கை மாட்டிக்‌ கொள்ளத்‌ தயாராகு” (இச்சட்டத்தை எதிர்த்து) என்று அறை கூவல்‌ விடுத்தார்‌. சென்னை மாகாண ஆளுநர்‌, உசிலம்பட்டி பகுகியில்‌ நடைபெறுகின்ற ஜல்லிக்கட்டைப்‌ பார்க்க வருவதாக திட்டமிட்ட போது, தேவர்‌ இதில்‌ ஏதோ சூழ்ச்சி இருக்கிறது என்று கருதி, ஜல்லிக்கட்டை புறக்கணிக்குமாறு பிரமலைக்கள்ளர்களுக்கு வேண்டுகோள்‌ விடுத்தார்‌. 
  • இதன்‌ காரணம்‌, காளைகளை அடக்குவதில்‌ பிரமலைக்கள்ளர்கள்‌ காட்டும்‌ வீர தீரத்தைக்‌ கண்டு, இவர்கள்‌ மீது குற்றப்பரம்பரைச்‌ சட்டம்‌ புகுத்தியது சரி என்று சென்னை மாகாண ஆளுநர்‌ கருதி விடுவார்‌ என்று அஞ்சினார்‌. இவருடைய வேண்டுகோளின்படி பிரமலைக்கள்ளர்கள்‌ ஜல்லிக்கட்டைப்‌ புறக்கணித்தனர்‌. 1940ஆம்‌ ஆண்டு செப்டம்பர்‌ மாதம்‌, இந்திய பாதுகாப்புச்‌ சட்டப்படி கைது செய்யப்பட்ட தேவர்‌ 1945 ஆம்‌ ஆண்டு ஜுன்‌ மாதம்‌ வரை சிறையிலிருந்தார்‌. 1942 ஆம்‌ ஆண்டு சுபாஷ்‌ சந்திர போஸ்‌ நிறுவிய “இந்திய பார்வர்டு பிளாக்‌” கட்சி தடை செய்யப்பட்டது. குற்றப்பரம்பரைச்‌ சட்டத்தை நீக்குவதில்‌ தேவரின்‌ பங்கு
  • இச்சட்டத்தை நீக்க வேண்டுமென்று 1946 ஆம்‌ ஆண்டு ஏப்ரல்‌ மாதம்‌, அப்போதைய சென்னை மாகாண உள்துறை அமைச்சராக இருந்த டாக்டர்‌. பி. சுப்பராயன்‌, மசோதா ஒன்றை அறிமுகப்படுத்தினார்‌. அம்மசோதா மீது ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி மற்றும்‌ குற்றப்பரம்பரைச்‌ சட்டத்தால்‌ பாதிக்கப்பட்டவர்‌, பாதிக்கப்படாதவர்‌ என்று பாகுபாடின்று இச்சட்டத்தை விலக்கிக்‌ கொள்ள கருத்துக்களை வழங்கினார்கள்‌. அப்போது, எதிர்க்கட்சியாக முஸ்லீம்‌ லீக்‌ செயல்பட்டது. எதிர்க்கட்சி உறுப்பினரான பேகம்‌சுல்தான்‌ மீர்‌ அம்ருதீன்‌ என்ற பெண்மணி கூறுகையில்‌ “ “நாகரிகமான நாட்டில்‌உள்ள சட்டப்‌ புத்தகத்தில்‌ எழுதப்பட்ட ஒரு கரும்புள்ளி தான்‌ இந்தச்‌ சட்டம்‌” என்று கூறினார்‌. மேலும்‌ ஆர்‌.வி. சுவாமிநாதன்‌, வி.ஐ. முனியசாமி பிள்ளை, ராஜாராம்‌ நாயுடு, ரெங்காரெட்டி மற்றும்‌ பலர்‌ இச்சட்டத்தை நீக்கக்கோரி சட்டமன்றம்‌ மற்றும்‌ சட்ட மேலவையில்‌ பேசினர்‌. 
  • அதன்‌ அடிப்படையில்‌ குற்றப்பரம்பரைச்‌ சட்டத்தை ரத்துச்‌ செய்யும்‌ மசோதா சட்டமாக நிறைவேறியது. இறுதியாக, இம்மசோதா ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டு, 1947 ஆம்‌ ஆண்டு மே மாதம்‌ 30 ஆம்‌ நாள்‌ தலைமை ஆளுநரின்‌ ஒப்புதல்‌ பெற்று, 1947 ஆம்‌ ஆண்டு ஜுன்‌ 5 ஆம்‌ தேதி முதல்‌ குற்றம்‌ பரம்பரைச்‌ சட்டம்‌ முழுமையாக நீக்கப்பட்டது. குற்றப்பரம்பரைச்‌ சட்டத்தை நீக்குவதில்‌ தேவரின்‌ பங்கு
  • தேவரின்‌ குற்றப்பரம்பரை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள்‌ தேவரை ஜாதியவாதியாக காட்ட முற்படுகிறது. ஆனால்‌ உண்மையில்‌ இந்தியாவில்‌ 89க்கும்‌ மேற்பட்ட ஜாதிகள்‌ இக்கொடூரச்‌ சட்டத்தின்‌ கோரப்பிடியில்‌ சிக்கியிருந்தனர்‌. தமிழகத்தில்‌ தேவரினத்தை தவிர வேப்பூர்‌ பறையர்களும்‌, படையாட்சிகளும்‌, குறவர்களும்‌ கூட இச்சட்டத்தால்‌ பாதிக்கப்பட்டிருந்தனர்‌. எனவே இப்போராட்டம்‌ விடுதலை போராட்டத்தின்‌ ஒரு பகுதியே தவிர, தன்‌ ஜாதிக்காக போராடிய போராட்டமல்ல !

குற்றப்பரம்பரைச்‌ சட்டத்தை நீக்குவதில்‌ தேவரின்‌ பங்கு

User Rating: 5 ( 1 votes)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button