Site icon ழகரம்

கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா ; ஆளுநர் கருத்துக்கு திமுகவின் முரசொலி விமர்சனம்…!

ஆளுநர் ஆர்.என்.ரவியின் குடியுரசுத் தின வாழ்த்து செய்தியில் நீட் தேர்வு, இருமொழி கொள்கை ஆகியவை குறித்து குறிப்பிட்டிருந்தார். இதனை திமுகவின் அதிகாரப்பூர்வ நாளோடான முரசொலி கடுமையாக விமர்சித்துல்லது.

திமுகவின் அதிகாரப்பூர்வ நாளோடான முரசொலி கொக்கென்று நினைத்தாரோ: தமிழக ஆளுநர் ரவி என்ற தலைப்பில் இன்று கட்டுரையை வெளியிட்டுள்ளது.

நாகாலாந்தின் தேசியவாத ஜனநாயக கட்சியின் தலைவர் சிங்வாங் கோன்யாக் ( Chingwang Konyak ) “ஆளுநர் ரவியின் செயல் பாடு மகிழ்ச்சி தருவதாக இருந்ததில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் செயல்பாடுகளில் அவரது குறுக்கீடு அதிக மிருந்தது ” – என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டியிருந்தார் .

நீட்’டுக்கு எதிராக தமிழகச் சட்ட மன்றம் ஒரு மனதாகத் தீர்மானம் நிறைவேற்றி அதனை ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி மாதங்கள் சில கடந்தும் , அது கிடப்பிலே கிடக்கிறது ; அதன் நிலை என்ன என்று தெரியாத நிலையில், ‘ நீட் ’ வருவதற்கு முன் , இருந்த நிலையை விட ‘ நீட் ’ வந்தபின் அரசுப் பள்ளி மாண வர்களின் மருத்துவப் படிப்பு சேர்க்கை அதிகரித்துள்ளது – என்று கூறியிருக்கிறார் ! ஒட்டுமொத்தத் தமிழகமுமே (ஒருசில சங்கிகளைத் தவிர) நீட்டை எதிர்த்து நிற்கும் நிலையில் , தமிழகத்தின் சட்டப் பேரவையே அதனை எதிர்த்து ஒருமித்துத் தீர்மானம் நிறைவேற்றியுள்ள வேளையில் ; அதுவும் அவரது பரிசீலனையில் இருக்கும் கால கட்டத்தில் , ஒரு ஆளுநர் இப்படி | அறிவிப்பது – எந்த வகை நியாயம் ?

ஏறத்தாழ 7 கோடி தமிழ் மக்களின் பிரதிநிதிகள் அடங்கிய தமிழகச் சட்ட மன்றம் ஒருமனதாக நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பிய தீர்மானத்தின் மீது எந்தக் கருத்தும் தெரிவிக்காது – சட்டத்தின் சந்து பொந்துகளில் பதுங்கிக் கொண்டு இருப்பது எந்தவித நியாயம் என்பதை ஆளுநர் ரவி தெரிவிக்க வேண்டும் !

உரிய தகவலை மேலிடத்துக்குத் தந்து – ஒட்டு மொத்தத் தமிழகத்தின் உரிமைக் குரலுக்கு அங்கீகாரம் வாங்கித் தர முயற்சி செய்ய வேண்டும் ! அதனை விடுத்து இங்கே ‘ பெரியண்ணன் ‘ மனப்பான்மையோடு அரசியல் செய்ய நினைத்தால் , ” கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா.

” எனும் பழங்கதை மொழியை அவ ருக்கு நினைவுபடுத்த விரும்புகிறோம்; அதாவது, இது நாகாலாந்து அல்ல; தமிழகம் என்பதை அவர் உணர்ந்திட வேண்டும் ” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Exit mobile version