கடந்த 1970-ம் ஆண்டில் ஆப்பிரிக்காவின் காங்கோ நாட்டில் முதல்முறையாக குரங்கு அம்மை கண்டறியப்பட்டது.
கடந்த 14-ம் தேதி இந்தியாவின் கேரளாவில் முதல் குரங்கு அம்மை நோயாளி கண்டறியப்பட்டார். அந்த மாநிலத்தில் 3 பேருக்கு நோய் பரவியுள்ளது. இதுவரை 75 நாடுகளில் 16,000பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக உலக சுகாதார அமைப்பின் (டபிள்யூஎச்ஓ) தலைவர் டெட்ராஸ் அதானன் கேப்ரியாசஸ் தலைமையில் ஜெனீவாவில் நேற்று உயர்நிலைக் கூட்டம் நடைபெற்றது. இதன்பிறகு நிருபர்களுக்கு காணொலி வாயிலாக பேட்டி அளித்த கேப்ரியாசஸ், ‘‘குரங்கு அம்மை உலக அச்சுறுத்தலாக உருவெடுத்திருக்கிறது’’ என்று அறிவித்தார்.