Site icon ழகரம்

திருப்பூரில் மநீம வேட்பாளர் தூக்கிட்டு தற்கொலை…!

திருப்பூர் மாநகராட்சி தேர்தலில் 44 வாக்குகள் மட்டுமே கிடைத்ததால் விரக்தியில் இருந்ததாக கூறப்படும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் தூக்கிட்டு தற்கொலை செய்தகொண்டது தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

திருப்பூர் மாநகராட்சி தேர்தலின் 36-வார்டில் மக்கள் நீதி மையம் சார்பில் போட்டியிட்டார் மூட்டை தூக்கும் தொழிலாளி மணி (55). தேர்தல் செலவுக்காக அக்கம் பக்கத்தில் ரூ.50,000 வரை கடன் வாங்கி செலவு செய்துள்ளார்.

கடந்த 22-ம் தேதி வாக்கு எண்ணிக்கையின்போது, மக்கள் நீதி மையம் வேட்பாளர் மணி வெறும் 44 ஓட்டுகள் மட்டுமே பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் திவாகரன் 3,319 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றர்.

இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான மணி நேற்று இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

 

Exit mobile version