Site icon ழகரம்

மெரினா கடற்கரையில் மாணவர்களுடன் செல்பி எடுத்த மகிழ்ந்த முதல்வர்….!

சென்னையில் 26.01.2022 அன்று நடைபெற்ற குடியரசு தினவிழாவில் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெற்றது. அதை தொடர்ந்து அலங்கார ஊர்தி தமிழகம் முழுக்க 23 நாட்களில் 2,100 கிலோ மீட்டர் பயணம் செய்தது.

தமிழகம் முழுக்க அணிவகுப்பு முடிவடைந்து சென்னை வந்தடைந்த அலங்கார ஊர்திகள் பிப்.20-ம் தேதி முதல் பிப்.23-ம் தேதி வரை பொதுமக்கள் பார்வைக்காக மெரினா கடற்கரையில் காட்சிப்படுத்தப்படும் என தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

முதலமைச்சர் முக ஸ்டாலின் மெரினா கடற்கரையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அலங்கார ஊர்திகளை பார்வையிட்டு அங்கிருந்த மாணவ, மாணவிகளுடன் மகிழ்ச்சியுடன் உற்சாகமாக புகைப்படம் எடுத்து கொண்டார்.

 

Exit mobile version