பட்டு வேட்டி, சட்டை அணிந்து செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா மேடைக்கு வந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் பிரதமர் மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாகூர், முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்கின்றனர். இதில் கலந்துகொள்ள 187 நாடுகளில் இருந்து 2000-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மாமல்லபுரத்தில் இருந்து 87 பேருந்துகளில் நேரு விளையாட்டு அரங்கம் அழைத்துவரப்பட்டனர். இவர்களுக்கு தமிழக அரசு சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், நேரு விளையாட்டு அரங்கில் தொடக்க விழா மேடை மின்னும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. வண்ண விளக்குகளால் மின்னும் நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் மேடை அமைக்கப்பட்டுளளது. குறிப்பாக, சதுரங்க காய்களை கொண்டு இந்த மேடை அமைக்கப்பட்டள்ளது. தொடக்க நிகழ்ச்சியில் தமிழகத்தின் பெருமைகளை பறைசாற்றும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கும் நடைபெறுகிறது.
இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பட்டு வேட்டி, சட்டையில் மேடையில் அமர்ந்துள்ளார். மேலும், நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை முதல்வர் பார்வையிட்டார்.