கன்னியாகுமரி மாவட்டத்தைச் சார்ந்த சஜிகுமார் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். உள்ளிட்ட தலைவர்கள் குறித்து சமூக ஊடகங்களில் அவதூறாக வீடியோ பதிவிட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
தென்காசி மாவட்டம் ஆதிதிராவிட நலத்துறையில் ஓட்டுனராக பணிபுரியம் இவர் கலைஞர் கருணாநிதி, எம்.ஜி.ஆர். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திராவிட கழகத் தலைவர் வீரமணி உட்பட பல்வேறு திராவிட இயக்கத் தலைவர்களை அவதூறாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் வீடியோ பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.
சஜிகுமார் மீது கொல்லங்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தென்காசியில் இருந்த அவரை கைது செய்தனர்.