தமிழகத்தில் உள்ள அரசு அதிகாரிகள் ஒன்றிய அரசுக்கு பயப்படுகிறார்கள் என அமைச்சர் கே என் நேரு திருச்சியில் பேசிய சம்பவம் அதிர்ச்சியாக இருக்கிறது. இதுகுறித்து அமைச்சர் கே என் நேரு திருச்சியில் பேசுகையில், வெட்கத்தை விட்டு சொல்கிறேன்-தமிழக அதிகாரிகள் ஒன்றிய அரசுக்கு பயப்படுகிறார்கள். பிளவுப்பட்டு கிடக்கும் அதிமுகவின் இரு அணிகளையும் பாஜகதான் ஒன்று சேர விடாமல் தடுக்கிறது.அமைச்சரின் இந்த பேச்சு அதிகாரிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் அவர் அதிமுக ஒன்றிணையாமல் இருந்தால்தான் பாஜகவால் சட்டசபையில் எதிர்க்கட்சியாக செயல்படும் என்பதால் தடுக்கிறது. பாஜகவினர் சின்ன விஷயத்தை கூட பெரிதாக்குகிறார்கள். முதல்வர் ஸ்டாலின் திருச்சிக்கு வரும் 4ஆம் தேதி வருகிறாரா என்பது நாளைதான் தெரியும் என அமைச்சர் நேரு தெரிவித்துள்ளார்.