Site icon ழகரம்

பேஸ்புக்:ஏப்ரல் மாதம் மட்டும் வெறுப்பு பேச்சுக்கள் 82% அதிகரித்துள்ளது

கடந்த ஏப்ரல் மாதம் பேஸ்புக்கில் 82% வெறுப்பு பதிவுகள் அதிகரித்துள்ளது.இதே போன்று இன்ஸ்டாகிராமில் வன்முறை மற்றும் வன்முறை தூண்டும் விதமான பதிவுகள் 86% அதிகரித்துள்ளது.இதனை மெட்டா நிறுவனம் தனது மாதாந்திர அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மே31 அன்று வெளியிடப்பட்ட  அறிக்கையில் ஏப்ரல் மாதத்தில் மட்டும் 53,200 வெறுப்பு பதிவுகளை  கண்டறிந்தது.மார்ச் மாதத்தில் கண்டறியப்பட்ட 38,600 வெறுப்பு பதிவுகளுடன் ஒப்பிடுகையில் 82%  அதிகரித்துள்ளது.இன்ஸ்டாகிராமில் மார்ச் மாதத்தில் 41,300 வன்முறையை தூண்டும் பதிவுகள் பதிவாகியிருந்தன. அது ஏப்ரல் மாதத்தில் 77,000 ஆக அதிகரித்துள்ளது.

“எங்கள் தரநிலைகளுக்கு எதிராகஉள்ள  பதிவுகளின்  எண்ணிக்கையை (இடுகைகள், புகைப்படங்கள், வீடியோக்கள் அல்லது கருத்துகள் போன்றவை) நாங்கள் அளவிடுகிறோம்.  நடவடிக்கை எடுப்பதில் உள்ளடக்கத்தின் ஒரு பகுதியை அகற்றுவது அடங்கும். ஃபேஸ்புக் அல்லது இன்ஸ்டாகிராம் அல்லது சில பார்வையாளர்களுக்கு இடையூறு விளைவிக்கும் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கிறோம்” என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

Exit mobile version