செய்திகள்தமிழ்நாடு

பொய் பிரச்சாரம் செய்யும் அண்ணாமலை மீது நடவடிக்கைவேண்டும்…..!

அரியலூர் மாணவி தற்கொலை விவகாரம் குறித்து தொடர்ந்து பொய்ப் பிரச்சாரம் செய்து வரும் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

‘மாணவி தற்கொலை செய்தது வருத்தமளிக்கிறது. ஆனால் மாணவியின் மரணத்தை வைத்து பா.ஜ.க அரசியல் ஆதாயம் தேடுகிறது. மதமாற்ற வற்புறுத்தலால் தான் மாணவி தற்கொலை செய்தார் என கூறி அமைதிப் பூங்காவாக உள்ள தமிழகத்தில் பிரச்சனை ஏற்படுத்தி வருகிறது.

கிறிஸ்தவ மிஷினரி சார்பில் ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு கல்வி கற்றுக் கொடுக்கப்படுகிறது. தற்போது பா.ஜ.க ஏற்படுத்தி உள்ள பிரச்சனையால் அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். மாணவி தற்கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவி தன்னுடைய பிரச்சனை குறித்து பெற்றோரிடம் கூறாமல் யாரோ ஒருவரிடம் கூறியது ஏற்புடையதாக இல்லை. சொல்லப் போனால் அந்த நபர் எடுத்த வீடியோ கூட உண்மையா என்று தெரியவில்லை.

ஒருவேளை உண்மையாக இருப்பினும் அதில் பேசியது மாணவியின் குரல் தானா என்ற சந்தேகம் உள்ளது. இதுகுறித்து நீதிமன்றம் ஆய்வு செய்து வருகிறது. அதற்குள் மற்றொரு வீடியோ வெளிவந்துள்ளது. இன்னும் இதுபோன்று எத்தனை வீடியோக்கள் வரும் என தெரியவில்லை. மாணவி மரணத்தை வைத்து பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் மத மோதலை ஏற்படுத்த முயற்சி செய்கிறார்.

ஒரு படித்த ஐ.பி.எஸ் அதிகாரி செய்யும் வேலையா இது. அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக விசாரணைக் குழு என்று 4 பேரை பா.ஜ.க நியமித்துள்ளது. இதனால் தமிழகத்தை கொச்சைப்படுத்தி, அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் இருந்தே மத மோதலை தேசிய அளவில் பாஜக கொண்டு செல்ல முயற்சி செய்கிறது.

மதமாற்றம் நடக்கவில்லை: ஒரு தரப்புக்கு ஆதரவாக பேசச் சொல்கிறார்கள்- தஞ்சை ஆட்சியரிடம் ஊர்மக்கள் புகார்

இவர்கள் மாநில அரசை மீறி எப்படி விசாரணை குழு அமைக்கலாம். தூய இருதய பள்ளியானது 162 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. லட்சக்கணக்கான மாணவ-மாணவிகள் படித்து உள்ளனர். இதில் அனைத்து மதத்தினரும் படித்து உள்ளனர். தற்போது படித்து வருகின்றனர். இதுவரை இப்படி ஒரு பிரச்சனை வரவில்லை. தற்போது மதமாற்ற பிரச்சினை வந்துள்ளது. புரியாத புதிராக உள்ளது.

இதுதவிர பெற்றோர் தொந்தரவால் மாணவி தற்கொலை செய்துள்ளார் என்று செவி வழி செய்தியாக வருகிறது. இப்படி ஒவ்வொரு பிரச்சனையும் செவி வழி செய்தியாக தான் உள்ளது. எனவே போலீசார் தீவிர விசாரணை நடத்தி உண்மைத் தன்மையைக் வெளிக்கொண்டுவர வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button