வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைப்பது தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலர்களுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி இன்று ஆலோசனை நடத்தினார்.
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான அறிவிப்பு கடந்த மாதம் வெளியிட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்தப் பணிகள் தொடர்பாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு இன்று அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் வாக்காளர் பதிவு அலுவலர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆய்வு ஆலோசனை மேற்கொண்டார்.
இந்தக் கூட்டத்தில் 01.08.2022 முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ள வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக இந்தியத் தேர்தல் ஆணையத்திடமிருந்து பெறப்பட்ட அறிவுரைகள் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கு தெரிவித்தார்.