ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்ன் (52) மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.
ஷேன் வார்னே தனது வில்லா இல்லத்தில் சுய நினைவின்றி கிடந்தது கண்டறியப்பட்டதாகவும், உரிய மருத்துவ உதவிகள் வழங்கியும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை எனவும் அவரது நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷேன் வார்ன் ஆஸ்திரேலிய அணிக்காக 145 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 708 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார். 194 ஒரு நாள் போட்டிகளில் 293 போட்டிகளை விளையாடி உள்ளார்.
ஐபிஎல் தொடரின் முதல் வெற்றி கோப்பையை தட்டி சென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஷேன் வார்ன் தான் கேப்டனாக இருந்தார்