Site icon ழகரம்

லதா மங்கேஷ்கர் மறைவுக்கு அரசு விடுமுறை அறிவிப்பு…..!

உடல் நலக்குறைவு காரணமாக முதுபெரும் பாடகி லதா மங்கேஷ்கர் நேற்று தனது 92-வது வயதில் காலமானார். அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் நேற்று மும்பையில் தகனம் செய்யப்பட்டது.

லதா மங்கேஷ்கரின் மறைவையொட்டி 7 மாநிலங்கள் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா

2 நாட்கள் அரசு விடுமுறையை கர்நாடக அரசு அறிவித்துள்ளது. அரசு விழாக்கள் இந்த நாட்களில் நடைபெறாது என்றும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா

இன்று ஒருநாள் அரசு விடுமுறை மகாராஷ்டிராவில் அறிவிக்கப்பட்டுள்ளது. லதா மங்கேஷ்கரின் உடல் நேற்று மாலை மும்பை சிவாஜி மைதானத்தில் தகனம் செய்யப்பட்டது. இதில் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கோவா

கோவா அரசு 3 நாட்கள் அரசு விடுமுறையை அறிவித்துள்ளது. இந்த நாட்களில் மூவர்ணக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்.

மேற்கு வங்கம்

இன்று ஒருநாள் விடுமுறை அறிவித்துள்ள மேற்கு வங்க அரசு, அடுத்து வரும் 15 நாட்களுக்கு நடைபெறவுள்ள அரசு நிகழ்ச்சிகளில், லதா மங்கேஷ்கரின் பாடல்களை ஒலிபரப்புமாறு உத்தரவிட்டுள்ளது.

மத்திய பிரதேசம்

மத்திய பிரதேச அரசு 2 நாட்களுக்கு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 2 நாட்களுக்கு மூவர்ணக் கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்படும். லதா மங்கேஷ்கர் பிறந்தது மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் என்பது குறிப்பிடத்தக்கது.

சட்டீஸ்கர்

நேற்றும் இன்றும் சட்டீஸ்கர் மாநிலத்தில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. இரு நாட்களும் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும். பொழுது போக்கு மற்றும் கலைநிகழ்ச்சிகள் இவ்விரு நாட்களும் அரசு சார்பாக நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சிக்கிம்

லதா மங்கேஷ்கரின் மறைவையொட்டி நேற்றும் இன்றும் 2 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று முதல்வர் பிரேம் சிங் தமாங் அறிவித்துள்ளார்.

 

Exit mobile version