Site icon ழகரம்

கும்பகோணம் வெற்றிலை : புவிசார் குறியீடு அங்கீகாரம் கோரி விண்ணப்பம்….!

‘கும்பகோணம் வெற்றிலை’க்கு புவிசார் குறியீடு கேட்டு, அதற்கான விண்ணப்பம் சென்னையில் உள்ள புவிசார் குறியீடு பதிவகத்தில் ஜன.13-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

திருவையாறு, ராஜகிரி, பண்டாரவாடை, ஆவூர், கும்பகோணம் ஆகிய பகுதிகளில் இந்த வெற்றிலை விளைவிக்கப்பட்டு, உள்ளூர் மட்டுமின்றி வெளிமாவட்டங்கள், மாநிலங்களுக்கும் நாள்தோறும் அனுப்பி வைக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் சோழவந்தான் வெற்றிலை, ஆத்தூர் வெற்றிலையை காட்டிலும் கும்பகோணம் வெற்றிலை மாறுபட்டிருக்கிறது.

இத்தகைய சிறப்பு பெற்ற கும்பகோணம் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு கேட்டு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் சார்பில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தோவாளை பகுதியைச் சேர்ந்த கைவினைக் கலைஞர்களால் உருவாக்கப்படும் ‘தோவாளை மாணிக்க மாலை’க்கும் புவிசார் குறியீடு அங்கீகாரம் கோரி கைவினைக் கலைஞர்கள் சார்பில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது

 

Exit mobile version