பாஜகவில் இருந்து விலகிய கு.க.செல்வம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மீண்டும் திமுகவில் இணைந்தார்
பாஜகவிலிருந்து விலகி மீண்டும் தாய் கழகமான திமுகவில் இணைவதால் மகிழ்ச்சி அடைகிறேன் என தெரிவித்தார்.
திமுக எனும் குடும்பத்துக்குள் அண்ணன், தம்பிகளுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டதால் அந்த குடும்பத்தில் இருந்து வெளியே சென்றதாகவும் தற்போது மீண்டும் அதே குடும்பத்திற்கு திரும்பி விட்டதாகவும் தெரிவித்தார்.