Site icon ழகரம்

கர்நாடகா ஹிஜாப் விவகாரத்தில் வன்னியரசுக்கு குஷ்பு பதில்….!

கர்நாடகா மாநிலம் உடுப்பியில் அரசு PUC கல்லூரியில் பயிலும் முஸ்லிம் மாணவியர் ஹிஜாபை வழக்கம்போல் அணிந்து வந்தபோது வகுப்பில் அமரக் கூடாது என நிர்வாகம் கூறியது.

அது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மாணவ, மாணவியர்களில் ஒருசிலர் காவி துண்டு அணிந்து கல்வி நிலையங்களுக்கு வரத் தொடங்கியுள்ளனர்.

பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இந்த விவகாரத்துக்கு கண்டனம் தெரிவித்துவருகின்றனர். இந்தநிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு ட்விட்டரில் அந்த வீடியோவை பதிவிட்டு குஷ்புவை டேக் செய்திருந்தார்.

அந்தப் பதிவில், ‘கர்நாடகா மாநிலத்தில் இந்தக் கொடுமையை கண்ட பிறகும் உங்களது கள்ளமவுனமும் சுயநலமும் அமைதி காக்கச்சொல்கிறதா? இதே தாக்குதலும் அச்சுறுத்தலும் சங்பரிவாரக்கும்பலால் நாளை உங்களது இரு பெண் குழந்தைகளுக்கும் ஏற்படாது என நம்புகிறீர்களா குஷ்பு மேடம்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

அதற்கு பதிலளித்த குஷ்பு :
2005-ம் ஆண்டு என்னுடைய குழந்தை டெங்குவால் பாதிக்கப்பட்டு போராடிக் கொண்டிருந்தபோது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவிடாமல் நீங்களும் உங்களது கட்சியினரும் என் வீட்டை மறித்து போராட்டம் நடத்தினீர்கள்.

அப்போது, எந்த சங் பரிவார கும்பலையும் நான் பார்க்கவில்லை. அது நீங்களும் உங்களுடைய முதுகெலும்பில்லாத கோழைகளும்தான். உங்களைப் போன்ற குண்டர்களை நான் இதுவரையில் பார்க்கவில்லை’ என்று குறிப்பிட்டுள்ளார்.

 

Exit mobile version