Site icon ழகரம்

கீரமங்கலம் பேரூராட்சி துணைத்தலைவர் ராஜினாமா..!

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் பேரூராட்சி துணைத் தலைவர் பதவிக்கு சிபிஐ வேட்பாளர் முத்தமிழ்செல்வி வேட்பு மனுத் தாக்கல் செய்திருந்தார்.

அதே நேரத்தில் திமுகவில் வெற்றி பெற்றிருந்த தமிழ்செல்வன் போட்டி வேட்பாளராக போட்டியிட்டு 11 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்தார்.

கூட்டணிக்கு பதவிகளை ஒதுக்கியும் அவர்களிடம் தராமல் திமுகவினரே பறித்துக் கொண்டதாக கூட்டணித் தலைவர்கள் புகார் கூறிய நிலையில், வெற்றி பெற்ற திமுகவினர் உடனே ராஜினாமா செய்ய முதலமைச்சர் அறிக்கை வெளியிட்டார்.

இதனை கீரமங்கலம் பேரூராட்சி துணைத் தலைவர் பதவியை தமிழ்செல்வன் ராஜினாமா செய்தார். தொடர்ந்து பேசும் போது, “தலைவர் அறிவிப்பை மதித்து அமைச்சர்கள் மெய்யநாதன், ரகுபதி ஆகியோர் கருத்திற்கு மதிப்பளித்து எனது துணைத்தலைவர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறேன்” என்றார்.

 

Exit mobile version