செய்திகள்தமிழ்நாடு

கடலில் வீணாகும் காவிரி நீர்! புதிய தடுப்பணை கோரிய வழக்கில் நீதிமன்றம் உத்தரவு!

தமிழக பொதுப்பணித்துறை செயலாளர் பதில் அளிக்க...

கடலில் வீணாகும் காவிரி நீர்! புதிய தடுப்பணை கோரிய வழக்கில் நீதிமன்றம் உத்தரவு!

 காவிரி நீர் புதிய தடுப்பணை

  • வீணாக கடலில் கலக்கும் காவிரி ஆற்றின் நீரை சேமிக்க கரூர் மாவட்டம், புஞ்சை  புகளூரில்  தடுப்பணை கட்ட கூறிய வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற கிளை புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
  • மதுரையைச் சேர்ந்த சுந்தர்ராஜன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனுதாக்கல் செய்திருந்தார்.  அதில் அவர் காவிரி ஆறு தலைக்காவிரியில் உருவாகி, பூம்புகார் கடலில் கலக்கிறது இது கர்நாடகம் மற்றும் தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களிலும் விவசாயத்திற்கு பெரிதும் பயன்படுகிறது.
  • தமிழகத்தில் நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சி, அரியலூர், நாமக்கல், கடலூர், புதுக்கோட்டை ஆகிய 8 மாவட்டங்களும் காவிரிப் படுகைகள் அமைத்துள்ளது இந்த எட்டு மாவட்டங்களில் நாகப்பட்டினம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்கள் காவிரி ஆற்றின் மூலம் 2.69  லட்சம் பாசன வசதி பெறுகிறது.  காவிரி நீர் புதிய தடுப்பணை
  • மீதமுள்ள 6 மாவட்டங்களும் 2.20 என்ற அளவில் மட்டுமே பாசன வசதி பெறுகிறது. காவிரி ஆற்றின் நடுவே தடுப்பணைகள் இல்லாததால் 2 லட்சத்துக்கும் அதிகமான கன அடி தண்ணீர் கடலில் கலந்து வருகிறது. தற்போது காவிரி ஆற்றின் மாயனூரில் தடுப்பணை ஒன்று உள்ளது இந்த அணையின் மொத்த கொள்ளளவு 1.04 டிஎம்சி அடியாக உள்ளது.
  • இதே போல்,  கூடுதல் தடுப்பணைகள் கட்டப்பட்டால் தண்ணீரை சேமித்து புதிய நீர் வழித்தடங்கள் மூலம் விவசாயம் செய்ய முடியாத மற்ற நிலங்களும் பயன்படுத்தலாம் இதற்காக 2018 அப்போதைய தமிழக அரசு காவிரியின் குறுக்கே கரூர் மாவட்டம் புஞ்சை புகலூரில் ரூ.490 கோடி  செலவில் தடுப்பணை கட்ட திட்டம் வகுத்தது ஆனால் தற்போது வரை இத்திட்டம் நடைமுறைப் படுத்தவில்லை எனவே கடலில் வீணாக கலக்கும் காவேரி ஆற்றின் நேரினை பயனுள்ள வகையில் சேமிக்கும் விதமாக கரூரில் புஞ்சை புகளூரில் தடுப்பணை கட்ட உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.  காவிரி நீர் புதிய தடுப்பணை
  • இந்த மனு நீதிபதிகள் மகாதேவன் சத்திய நாராயண பிரசாத் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது அதை விசாரித்த நீதிபதிகள் மனுதாரர் கூறுவது குறுகிய கால பணி இல்லை, ஆனால் இது ‘’முக்கிய பிரச்சனை’’ என கருத்து தெரிவித்தனர் தொடர்ந்து அரசு தரப்பில் இதற்கு இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன காவிரி ஆற்றில் கட்டப்பட உள்ள தடுப்பணை திட்டத்தின் முழு விவரம் குறித்து தமிழக பொதுப்பணித் துறை செயலர் பதிலளிக்க வேண்டுமென உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.

 காவிரி நீர் புதிய தடுப்பணை

  • இவ்வாறாக இவ்வழக்கில் காவிரி ஆற்றில் கட்டப்பட உள்ள தடுப்பணை திட்டத்தின் முழு விவரம் குறித்து தமிழக பொதுப்பணித்துறை செயலாளர் பதில் அளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button