Site icon ழகரம்

மேகேதாட்டு திட்டத்துக்கு அனுமதி கோரி கர்நாடக முதல்வர் பொம்மை மத்திய அமைச்சருடன் சந்திப்பு

காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் புதிய அணை கட்டுவதற்கான திட்டவரைவு அறிக்கையை கர்நாடக அரசு மத்திய அரசிடம் தாக்கல் செய்துள்ளது. இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்நிலையில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, நீர்வளத்துறை அமைச்சர் கோவிந்த் கார்ஜோள் உள்ளிட்டோர் நேற்று டெல்லி சென்றனர். அங்கு கர்நாடகாவை சேர்ந்த மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி உள்ளிட்டோருடன் மத்தி நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து பேசினார்.

அப்போது பசவராஜ் பொம்மை மேகேதாட்டு திட்டத்துக்கு மத்திய அரசு விரைவில் அனுமதி வழங்க வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தார்.

இந்த சந்திப்புக்கு பின் முதல்வர் பசவராஜ் பொம்மை கூறுகையில், “மேகேதாட்டு திட்டத்தால் பெங்களூருவில் குடிநீர் மற்றும் மின்சார தேவை நிவ‌ர்த்தி செய்யப்படும். எனவே இந்த திட்டத்துக்கு விரைவில் மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் கோரிக்கை விடுத்தேன். மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கர்நாடகாவின் கோரிக்கையை பரிசீலித்து உரியநடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்” என்றார்.

Exit mobile version