கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பள்ளி மாணவி மரணம் தொடர்பாக அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ள தமிழக அரசு, அதுகுறித்த அறிக்கையை மூடி முத்திரையிட்ட உறையில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
சின்னசேலம் பள்ளி மாணவி மரணம் தொடர்பாக மாணவியின் தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 3 அரசு மருத்துவர்கள் மற்றும் 1 ஓய்வுபெற்ற தடயவியல் நிபுணரை நியமித்து மறு உடற்கூறாய்வு நடத்த உத்தரவிட்டிருந்தது. மேலும், நியாயமான முறையில் விசாரணை நடத்தி உண்மையான குற்றவாளிகள் தப்பிக்காத வகையில் விசாரணை அதிகாரி செயல்பட வேண்டுமென உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றியது குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, “மாணவியின் உடற்கூறாய்வு முடிந்து, உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு, இறுதி சடங்குகள் முடிவுற்றதாக தெரிவித்தார். மேலும் இவை அனைத்தும் முழுமையாக வீடியோ பதிவு செய்யப்பட்டதாக தெரிவித்தார். உடற்கூறாய்வு ஆவணங்கள் ஆய்வுக்காக ஜிப்மர் மருத்துவமனைக்கு இன்று அனுப்பி வைக்கப்படும்.
மேலும் காவல்துறை தரப்பில் அறிக்கை ஒன்றை மூடி முத்திரையிட்ட உறையில் தாக்கல் செய்தார். பின்னர் டிஐஜி தலைமையில், கூடுதல் எஸ்பி., டிஎஸ்பி, ஆய்வாளர் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. மாணவி மரணம் மற்றும் கலவரத்தின்போது வதந்தி பரப்பி, ஊடக விசாரணை நடத்திய 63 யூடியூப் இணையதளங்கள், 31 ட்விட்டர் கணக்குகள், 27 முகநூல் பக்கங்கள் ஆகியவற்றில் உள்ள பதிவுகளை நீக்கும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் நடத்தப்படும் ஊடக விசாரணைகளால் காவல்துறை விசாரணை தாக்கத்தை ஏற்படுத்துகிறது.