Site icon ழகரம்

கள்ளக்குறிச்சி விவகாரம்: முதல்வர் ஆலோசனை

கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது இல்லத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக பங்கேற்றுள்ளார். தலைமைச் செயலகத்தில் இருந்து, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு, தலைமைச் செயலாளர் இறையன்பு, உள்துறைச் செயலாளர் பனீந்திர ரெட்டி, பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா, தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு, உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ள அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள், நேற்று சம்பவம் நடந்த கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும், அந்த பள்ளியில் படித்த மாணவர்களின் பெற்றோர்கள் உள்ளிட்டோரை சந்தித்து வந்தனர்.

குறிப்பாக இன்று நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர், அந்த பள்ளியில் படிக்கின்ற மாணவர்களுக்கு செய்யப்படவிருக்கிற மாற்று ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தமிழக அரசு தரப்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version