நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்தவருக்கு கொலை மிரட்டல் விடுத்த அவரது நண்பர் கைது செய்யப்பட்டார்.
பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா முகமது நபி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். ஆனாலும் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த சிலர் கொல்லப்பட்டனர். மேலும் சிலருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரைச் சேர்ந்த மகேந்திர சிங் ராஜ் புரோஹித் கடந்த ஜூன் 6-ம் தேதி நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார். இதையடுத்து, அவரது நண்பர் சோஹைல் கான் தலையை வெட்டி விடுவேன் என ராஜ் புரோஹித்துக்கு தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்துள்ளார். இதையடுத்து ராஜ் புரோஹித் போலீஸில் புகார் செய்துள்ளார். இதன் அடிப்படையில், ஜோத்பூர் போலீஸார் சோஹைல் கானை நேற்று முன்தினம் கைது செய்தனர்.