Site icon ழகரம்

“சொற்களைக் கண்டு மக்கள் விரோத அரசுகள் அஞ்சுவது புதிதல்ல” – சு.வெங்கடேசன்

“சொற்களைக் கண்டு மக்கள் விரோத அரசுகள் அஞ்சுவது புதிதல்ல” என்று மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கருத்து தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத சொற்கள் தொடர்பான பட்டியலை மக்களவைச் செயலாளர் வெளியிட்டுள்ளார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மதுரை எம்.பி சு.வெங்கடேசன், “சொற்களைக் கண்டு மக்கள் விரோத அரசுகள் அஞ்சுவது ஒன்றும் புதிதல்ல” என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நாடாளுமன்ற நெறி பிறழ்ந்த சொற்கள் பட்டியல் – 2022 வெளியிடப்பட்டுள்ளது. அந்தச் சொற்கள் இல்லாமல் சட்டங்களே இயற்ற முடியாது. சொற்களைக் கண்டு மக்கள் விரோத அரசுகள் அஞ்சுவது ஒன்றும் புதிதல்ல. இந்தச் சொற்கள் இல்லாமல் போனால் யாரும் கவலைப்பட போவதில்லை. உங்கள் பெயர்களே போதுமானது” என்று அந்தப் பதிவில் கூறியுள்ளார்.

Exit mobile version