நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் கணிசமாக குறைந்து வரும் நிலையில், கேட்டரிங் சேவையை மீண்டும் தொடங்குகிறது ஐ.ஆர்.சி.டி.சி. இருப்பினும், கொரோனா தடுப்பு விதிகள் முழுமையாக கடைபிடிக்கப்பட்டு உணவுகள் வழங்கப்படும் என்று ஐ.ஆர்.சி.டி.சி. நிறுவனம் கூறியுள்ளது.
பிப்ரவரி 14-ம்தேதி முதல் அனைத்து ரயில்களிலும் கேட்டரிங் சேவை மீண்டும் தொடங்கப்படும் என்று ஐ.ஆர்.சி.டி.சி. அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு இறுதியில் ப்ரீமியம் ரயில்களான ராஜதானி, சதாப்தி, டுராண்டோ ஆகிய ரயில்கள் கேட்டரிங் சேவை மீண்டும் தொடங்கப்பட்டது.