ரிசர்வ் வங்கி வைத்து இருக்கும் தங்கத்தின் அளவு அதிகரித்துளளது. அதாவது, ரிசர்வ் வங்கி வைத்து இருக்கும் தங்கத்தின் இருப்பு 700 டன் ஆக உயர்ந்துள்ளது. வரலாறு காணாத அளவு இந்த இருப்பு அதிகரித்துள்ளது. அதனால் உலகத்தின் தங்கத்தை அதிகளவு வைத்து இருக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இதன் பெற்று உள்ளது. கடந்த சில வருடங்கலாகா தங்கத்தின் மதிப்பு ஏறுமுகமாக இருந்து வருவது குறிப்பிட தக்கது.
அண்மை காலமாக ரிசர்வ் வங்கி அதிக அளவில் தங்கத்தை வாங்கி குவித்து வருகிறது. நடப்பு ஆண்டின் முதல் பாதியில் மட்டும் 29 டன் தங்கம் வாங்கி வைத்து வைத்துள்ளது. இது கடந்த ஆண்டை விட அதிகம். இப்போது தங்கத்தின் இருப்பு 700 டன் தாண்டி உள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 27 % தங்கத்தின் இருப்பு அதிகரித்துள்ளது. இதை அடுத்து அதிக அளவில் தங்கம் வைத்து இருக்கும் நாடுகளின் வரிசையின் முதல் 10 இடங்களில் இந்தியா இடம் பெற்றுள்ளது. அதிக அளவு தங்கத்தை வைத்து இருக்கும் நாடுகளில் முதல் இடத்தை பிடித்து இருப்பது அமெரிக்க ஆகும்.
கடந்த பத்தாண்டுகளில் தங்கத்தின் இருப்பு வீத 12% உயர்ந்துள்ளது என பார்லிமன்றத்தில் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளது, குறிப்பிடத்தக்கது. ஜூன் மாத நிலவரப்படி ரிசர்வ் வங்கியிடம் இருக்கும் தங்கத்தின் மதிப்பு 705.6 டன் ஆகும். இதுவே 2018 ஆண்டில் 558.1 டன் ஆக இருந்தது. இப்படி தங்கத்தின் இருப்பை அரசு அதிகரித்து வருகிறது.
தங்கத்தில் முதலீடு செய்வதால் அனைவரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். பங்கு சந்தை மட்டுமல்ல, டிஜிட்டல் உலகத்திலும் இந்த தங்கம் இப்போது வர தொடங்கி உள்ளது. டிஜிட்டல் முறையில் தங்கம் வாங்குவது அதிகரித்து வருகிறது.
கொரோனா பரவல் காரணமாக கடைகளுக்கு சென்று நேரடியாக தங்கம் வாங்குவது குறைந்து வரும் நிலையில், அனைத்தும் டிஜிட்டல் முறையில் தங்கம் வாங்கி குவிக்க தொடங்கி உள்ளனர். இன்று நேற்று அல்ல பல நூறு ஆண்டுகளாக தங்கம் முதலீடாக பார்க்க பட்டு வருகிறது.