கொரோனா மூன்றாம் அலையில் இருந்து தப்பிக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
, ஆகஸ்ட் மாத இறுதியில் மூன்றாம் அலை தொடங்கும் என எச்சரித்து உள்ளது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம்.
கடந்து 2020 ஜனவரியில் இருந்து கொரோனா கோரத்தாண்டவம் முதல் அலை இரண்டாம் அலை என தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இரண்டாம் அலை ஓரளவிற்கு குறைந்து கொண்டு இருக்கும் இந்த சூழ்நிலையில், ஆகஸ்ட் மாத இறுதியில் மூன்றாம் அலை தொடங்கும் என எச்சரித்து உள்ளது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம்.
தொற்று விகிதம் 5% அதிகமாக இருக்கும் இடங்களில் பொதுமுடக்கம் அறிவிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளது. கடந்து சில தினங்களாக தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது இப்படியே தொடர்ந்து கொண்டு இருந்தால் மூன்றாம் அலை மிகவும் மோசமாக இருக்கும். அதனால் தகுந்த தற்காப்பு முயற்சிகள் எடுக்க வேண்டும்.
இந்திய மருத்துவ கழகத்தின் தொற்று நோயியல் வல்லுநர் மருத்துவர், சமீரன் பாண்டே அவர்கள் குறிப்பிட்டுள்ளது, எந்த மாநிலங்கள் முறையான கட்டுப்பாடுகளை பின்பற்றவில்லை என்றால் மூன்றாவது அலையில் பாதிப்புகள் அதிகமாக இருக்கும் என எச்சரித்து உள்ளார். மேலும் 5% அதிகமாக தொற்று பாதிப்பு இருக்கும் இடங்களில் ஊரடங்கு முறை படுத்துவது அவசியம். இது தொற்று பரவாமல் இருக்க உதவி செய்யும்.
மருத்துவ நிபுணர்கள் கூறும் சில வழிமுறைகள்
நோய் எதிர்ப்பு சக்தி – இந்த கொரோனா பரவ தொடங்கிய நாளில் இருந்து பலரின் உணவு பழக்க வழக்கம் மாறி உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள உணவுகளை எடுத்து கொள்ள தொடங்கி இருக்கின்றனர். வைட்டமின் சி, இரும்பு ,சத்து புரதம் , மக்னேசியம், துத்தநாகம் நிறைந்த உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும்.
உடற் பயிற்சி – தினம் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி மற்றும் மூச்சு பயிற்சி செய்வது ஒவ்வொருவருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிக படுத்துகிறது. சில யோகா பயிற்சிகள் நுரையீரலின் செயல் திறனை அதிக படுத்துகிறது.
தனி மனித இடை வெளி, முக கவசம் , அடிக்கடி கைகளை சுத்தமாக கழுவுதல் போன்றவற்றை செய்ய வேண்டும். இது தொற்று பரவாமல் இருக்க உதவியாக இருக்கும்.
தடுப்பூசி, அனைவரும் இரண்டு டோஸ் தடுப்பூசி கட்டாயம் போட்டு இருக்க வேண்டும். இது தொற்றில் இருந்து அனைவரையும் பாதுகாக்கும்.