Site icon ழகரம்

ஹிஜாப் சர்ச்சை : மாணவர்கள் அமைதி காக்க வேண்டும்…!

கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து மாணவிகள் பள்ளி, கல்லூரி போன்ற கல்வி நிலையங்களுக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து 4 மனுக்கள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கிருஷ்ணா தீக்‌ஷித் : ‘அரசியலமைப்பின் மீது மக்களுக்கு நம்பிக்கை இருக்க வேண்டும். ஒரு பிரிவுதான் பிரச்சினையை எரிய வைக்கும். ஆனால் போராட்டம் நடத்துவது, வீதிக்கு செல்வது, கோஷம் எழுப்புவது, மாணவர்களைத் தாக்குவது, மாணவர்கள் பிறரைத் தாக்குவது, இவை நல்ல செயல் அல்ல.

நீதிமன்றத்தை தொந்தரவு செய்யாதீர்கள். நீதிபதிகளை அமைதியாக விட வேண்டும். நான் தொலைக்காட்சியில் நெருப்பையும் இரத்தத்தையும் கண்டால், நீதிபதிகள் சஞ்சலனத்திற்கு உள்ளாவர்கள். மனம் சஞ்சலனப்பட்டால் புத்தி வேலை செய்யாது. நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்துகொண்டு இருக்கும்போதே, வளாகத்திற்குள்ளேயும் வெளியேயும் நிறைய கலாட்டாக்கள் நடைபெறுவதாக அரசு தரப்பு வழக்கறிஞர் கூறுகிறார். வழக்கின் விசாரணை மீதமுள்ளதால் அனைத்து தரப்பினரும் அமைதி காக்க வேண்டும்’ என்று கூறி வழக்கு விசாரணையை நாளை பிற்பகலுக்கு ஒத்தி வைத்தார்.

 

Exit mobile version