நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை விமர்சித்த பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் மீது உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பதிவு செய்வதாக நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் பிரபலமான பத்திரிக்கையாளராக இருப்பவர் பத்திர்கையாளர் சவுக்கு சங்கர்.இவர் பல்வேறு யூடியுப் சேனல்களில் நேர்காணல் கொடுத்ததின் மூலம் பிரபலமடைந்தார்.யூடியூபர் மாரிதாஸ் தொடர்பான வழக்கில், உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் குறித்து சில கருத்துகளை தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டிருந்தார் சவுக்கு சங்கர். பின்னர் அந்தப் பதிவுகளை சவுக்கு சங்கர் நீக்கிவிட்டார்.அவருடைய இந்த பதிவிற்கு தான் தற்போது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. சமீபத்தில் இவருடைய ட்விட்டர் கணக்கும் இந்திய அரசின் அறிவுறுத்தலால் முடக்கப்பட்டது