நாடு முழுவதும் இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் 4 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளும் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, குழந்தைகளுக்கு ஏற்ற அளவுகளில் உரிய பாதுகாப்பு அம்சங்களுடன் தலைகவசங்களை தயாரிக்கும்படி ஹெல்மெட் தயாரிப்பாளர்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
குழந்தைகளுடன் இருசக்கர வாகனத்தில் பயணிக்கும்போது, 40 கி.மீ. வேகத்திற்கு மேல் வண்டியை ஓட்டக்கூடாது என்றும், விதிகளை மீறினால் ரூ.1000 அபராதம் அல்லது 3 மாதம் ஒட்டுனர் உரிமர் ரத்து செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.